Published:Updated:

அமெரிக்க கப்பலி்ல் இருந்த ஆயுதங்கள் பறிமுதல்: கியூ பிரிவு காவல்துறை நடவடிக்கை!

அமெரிக்க கப்பலி்ல் இருந்த ஆயுதங்கள் பறிமுதல்: கியூ பிரிவு காவல்துறை நடவடிக்கை!
அமெரிக்க கப்பலி்ல் இருந்த ஆயுதங்கள் பறிமுதல்: கியூ பிரிவு காவல்துறை நடவடிக்கை!
அமெரிக்க கப்பலி்ல் இருந்த ஆயுதங்கள் பறிமுதல்: கியூ பிரிவு காவல்துறை நடவடிக்கை!

தூத்துக்குடி: இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க கப்பலில் இருந்த ஆயுதங்களை கியூ பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவை சேர்ந்த "சீமென் கார்டு ஓகியா" என்ற கப்பலை இந்திய கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்து பிடித்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.

இந்த கப்பலில் 10 மாலுமிகள், 25 வீரர்கள் இருந்தனர். இது தொடர்பாக கடலோர காவல் படையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, துப்பாக்கி தோட்டாக்களை அதிகமாக வைத்திருந்ததால் (ஆயுத சட்டம்), சட்ட விரோதமாக டீசல் பரிமாற்றம் மற்றும் அனுமதிக்கப்பட்ட கால அவகாசத்தைவிடவும் கூடுதலாக பயண நேரம் எடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில், கப்பல்கேப்டன் டட்னிக் வாலென்டின் உள்பட கப்பல் ஊழியர்கள் 35 பேர் (இக்கப்பலில் பணிபுரியும் இந்தியாவைச் சேர்ந்த 9 ஊழியர்கள் உட்பட) மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே நேற்று இக்கப்பலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர், இந்த வழக்கு கியூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

##~~##
இந்நிலையில், கியூ பிரிவு எஸ்பி பவானீஸ்வரி தலைமையில் இன்று காலை கப்பலுக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும் கப்பலி்ல் இருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கை தருமாறு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது.
இதனையடுத்து, காவல்துறையினர் அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளனர். விரைவில் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு அனுப்பி வைக்கிறது.