Published:Updated:

தனுஷ்கோடி அருகே மணலில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்!

தனுஷ்கோடி அருகே மணலில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்!
தனுஷ்கோடி அருகே மணலில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்!

ராமேஸ்வரம்: இந்திய கடற்படை ஹெலிகாப்டர், இயந்திர பழுதினால் தனுஷ்கோடி அருகே மணலில் தரை இறங்கியது.

தனுஷ்கோடி அருகே மணலில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்!

நாட்டின் தென்கடலோர எல்லை பகுதியான வங்காளவிரிகுடா மற்றும் பாக்நீரிணை பகுதிகளில் அந்நிய நாட்டவரின் ஊடுருவல் மற்றும் சமூக விரோத செயல்களை தடுக்கவும், மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளில் இருந்து மீட்கவும் இந்திய கடற்படைக்கு சொந்தமான விமான படை தளம் உச்சிப்புளி அருகே இயங்கி வருகிறது.

ஐ.என்.எஸ். பருந்து என பெயரில் இயங்கி வரும் இந்த விமான படை தளத்தில் இருந்து நாள் தோறும் காலை, மாலைகளில் ரோந்து பணிகளில் ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய வகை விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு ரோந்து செல்லும் ஹெலிகாப்டர்கள் சமீப காலமாக அடிக்கடி ரோந்து செல்லும் போது இயந்திர பழுது ஏற்பட்டு வயல்வெளியிலும், மணல் பகுதிகளிலும் இறங்கும் நிலை உள்ளது.

தனுஷ்கோடி அருகே மணலில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்!

கடந்த மாதம் 18 ஆம் தேதி உச்சிப்புளி கடற்படை விமான தளத்திலிருந்து ரோந்து சென்ற ஹெலிகாப்டர் வழுதூர் எரிவாயு மின் உற்பத்தி நிலையம் மேலே சென்று கொண்டிருந்த பொது திடீரென பழுதானது. அந்த ஹெலிகாப்டரின் விமானி சமயோசிதமாக செயல்பட்டு எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தை கடந்து சென்று அருகில் இருந்த வயல்வெளியில் தரையிறக்கினார். இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை உச்சிப்புளியில் இருந்து புறப்பட்ட கடற்படை ஹெலிகாப்டர், தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் ரோந்து பணிக்காக சென்றது. இதில் விமானி, துணை விமானி மற்றும் கடற்படை வீரர் ஒருவர் உள்ளிட்ட 3 பேர் சென்றனர். இந்த ஹெலிகாப்டர் தனுஷ்கோடி பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீர் கோளாறு ஏற்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்தவாறே ஹெலிகாப்டரில் ஏற்பட்ட பழுதை விமானி சரிசெய்ய முயன்றுள்ளார்.

##~~##
ஆனாலும், பழுதை சரி செய்ய முடியாத நிலையில், தனுஷ்கோடி பாலத்திற்கு செல்லும் பழைய சாலையின் மீது ஹெலிகாப்டரை சாமர்த்தியமாக இறக்கினார். பின்னர், இது குறித்து கடற்படை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மணல் சாலையில் தரை இறங்கிய ஹெலிகாப்டரை மீட்கும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும் ஹெலிகாப்டர்கள் அடிக்கடி இதுபோன்று பழுதடைவதால் ரோந்து பணியில் தொய்வு ஏற்படுவதுடன், விபத்து ஏற்படுமோ என அச்சமும் எழுந்துள்ளது.

இரா.மோகன்

படங்கள்: உ.பாண்டி