Published:Updated:

இன்று ஓய்வு பெற இருந்த மன்னர் ஜவகர் திடீர் சஸ்பெண்ட் !

இன்று ஓய்வு பெற இருந்த மன்னர் ஜவகர் திடீர் சஸ்பெண்ட் !
இன்று ஓய்வு பெற இருந்த மன்னர் ஜவகர் திடீர் சஸ்பெண்ட் !
இன்று ஓய்வு பெற இருந்த மன்னர் ஜவகர் திடீர் சஸ்பெண்ட் !

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவகர் இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் திடீரென அவரை தமிழக அரசு இடைநீக்கம் செய்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.மன்னர்ஜவகர் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் இன்று (வியாழக்கிழமை) பணி ஓய்வு பெற இருந்தார்.

கடந்த 2008ம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர் பேராசிரியர் பி.மன்னர் ஜவகர்.

துணைவேந்தர் பதவி காலம் முடிவடைந்ததும், பேராசிரியராக அதாவது அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், மன்னர் ஜவகர் பணியில் இருந்து இன்று ஓய்வு பெறுவதாக இருந்தார். இதனிடையே, நேற்று அவரை இடைநீக்கம் செய்து அண்ணாபல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

##~~##
மன்னர் ஜவகர் மீது குற்றச்சாட்டு இருப்பதாக கூறி, அதற்காக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதற்காக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மன்னர் ஜவகர் துணைவேந்தராக இருந்த காலத்தில் விதிமுறைகளை மீறி அண்ணா பல்கலைக்கழகத்தில் கூடுதலாக மாணவர்களை சேர்த்ததாகவும், மாணவர்களுக்கு தேர்வின் போது கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதாகவும் சட்டப்பேரவையில் பிரச்னை எழுப்பப்பட்டது.
ஆனால் எந்த காரணத்திற்காக மன்னார் ஜவகர் இடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறித்த சரியான காரணம் தெரியவில்லை.