Published:Updated:

காமன்வெல்த்தில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு: 60,000 வழக்கறிஞர்கள் போராட்டம்!

சென்னை: இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி தமிழகம், புதுச்சேரியில் 60 ஆயிரம் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் வரும் 15ஆம் தேதி காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை கனடா புறக்கணித்து விட்டது. இதேபோல் இந்தியாவும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழகத்தில் எதிர்ப்பு குரல் ஓங்கி ஒலித்து வருகிறது.

இந்நிலையில், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி தமிழகம், புதுச்சேரியில் இன்று வழக்கறிஞர்கள் ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

##~~##
இந்த புறக்கணிப்பு போராட்டத்தில் 60 ஆயிரம் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளதாக தமிழகம், புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் பரமசிவம் தெரிவித்தார்.