Published:Updated:

பிடிவாரண்டை ரத்து கோரிய நடிகை அஞ்சலி மனு தள்ளுபடி!

பிடிவாரண்டை ரத்து கோரிய நடிகை அஞ்சலி மனு தள்ளுபடி!
பிடிவாரண்டை ரத்து கோரிய நடிகை அஞ்சலி மனு தள்ளுபடி!
பிடிவாரண்டை ரத்து கோரிய நடிகை அஞ்சலி மனு தள்ளுபடி!

சென்னை: இயக்குனர் களஞ்சியம் தொடர்ந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரி நடிகை அஞ்சலி தாக்கல் செய்த மனுவை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தன் மீது பொய்யான புகாரை கூறிய நடிகை அஞ்சலி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும் என்று கூறி, இயக்குனர் களஞ்சியம் சைதாப்பேட்டை பெருநகர 17வது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது நடிகை அஞ்சலி நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகை அஞ்சலி மீதான பிடிவாரண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி, அவர் சார்பில் நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

##~~##
இந்த மனு மீதான விசாரணையின் போது இயக்குனர் களஞ்சியத்தின் வழக்கறிஞர்கள், பிடிவாரண்டை ரத்து செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராஜலட்சுமி, நடிகை அஞ்சலி மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் அஞ்சலி ஆஜராகி தனது தரப்பு பதிலை பதிவு செய்ய வேண்டும் என்றும் அஞ்சலி நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணயை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.