Published:Updated:

திருவண்ணாமலையில் மகா தேரோட்டம்!

விகடன் விமர்சனக்குழு
திருவண்ணாமலையில் மகா தேரோட்டம்!
திருவண்ணாமலையில் மகா தேரோட்டம்!
திருவண்ணாமலையில் மகா தேரோட்டம்!

திருவண்ணாமலை:  திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி இன்றுகாலை மகா தேரோட்டம் நடைபெற்றது இதில் லடசக்கணக்கான் பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகைதீப திருவிழா கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடர்ந்து தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது.

5 ஆவது நாள் இரவு விநாயகர் வெள்ளி மூஷிகத்திலும், முருகர் வெள்ளி மயில் வாகனத்திலும், அண்ணாமலையார் பெரிய ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷபத்திலும் வதிஉலா வந்தனர்.

6 ஆவது நாளான நேற்று காலை விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலா நடந்தது. யானை வாகனத்தில் விநாயகரும், வெள்ளி யானையில் சந்திர சேகரரும் வீதிஉலாவந்தனர்.

##~~##
முன்னதாக  63 நாயன்மார்கள் வீதிஉலா நடந்தது. பள்ளி மாணவர்கள் நாயன்மார்களை தோளில் சுமந்து மாடவீதியை சுற்றி வந்தனர். இதை காணமாடவீதிகள் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்தனர்.