Published:Updated:

சென்னை: புதுப்பிக்கப்பட்ட கலங்கரை விளக்கம் திறப்பு!!

சென்னை:  புதுப்பிக்கப்பட்ட கலங்கரை விளக்கம் திறப்பு!!
சென்னை: புதுப்பிக்கப்பட்ட கலங்கரை விளக்கம் திறப்பு!!
சென்னை:  புதுப்பிக்கப்பட்ட கலங்கரை விளக்கம் திறப்பு!!

சென்னை:  சென்னை மெரீனா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட கலங்கரை விளக்கம், அருங்காட்சியகம் ஆகியவற்றை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்து வைத்தார்

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மெரினா கலங்கரை விளக்கத்தை பாதுகாப்பு கருதி, பொது மக்கள் பார்வையிட கடந்த 1994–ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. தற்போது சென்னை கலங்கரை விளக்கம் ரூ.1 கோடி செலவில் ‘லிப்ட்’ மற்றும் நவீன வசதியுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

தரைத்தளத்தில் கப்பல் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய கப்பல் துறை பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன.

நவீனமயம் ஆக்கப்பட்டுள்ள சென்னை கலங்கரை விளக்கம், கப்பல் அருட்காட்சியகம் ஆகியவற்றை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான திறப்பு விழா இந்தியாவில் 7 இடங்களில் அமைக்கப்பட உள்ள நவீன கப்பல் தொடர்பு மையங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா ஆகியவை இன்று நடந்தது.

சென்னை மெரினா கலங்கரை விளக்க வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். அவர் புதுப்பிக்கப்பட்ட கலங்கரை விளக்கம், அருங்காட்சியகம் ஆகியவற்றை திறந்து வைத்து நவீன கப்பல் தொடர்பு மையங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போது பேசிய அவர்,"சென்னை மெரினா கலங்கரை விளக்கம் மாணவ –மாணவிகள், பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் பயன் பாட்டுக்காக புதுப்பித்து திறக்கப்பட்டுள்ளது. இது கப்பல்துறை அதிகாரிகளின் தீவிர முயற்சியால் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பொது அறிவை வளர்ப்பதற்கும், ஆற்றலை ஊக்குவிப்பதற்கும் இது பயன்படும். கடலில் கப்பல் செல்வதையும் இதன்மூலம் பார்க்கலாம்.

2 மாதங்களுக்கு முன்பு இதை திறக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் எல்லா வசதிகளையும் செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து இப்போது திறந்திருக்கிறோம். இந்தியாவிலேயே லிப்ட் வசதியுடன் கூடிய கலங்கரைவிளக்கம் சென்னையில்தான் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

பார்வையாளர்கள் கட்டணம்

சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை கலங்கரை விளக்கத்தை சுற்றிப்பார்க்க சிறுவர்களுக்கு ரூ.5–ம், பெரியவர்களுக்கு ரூ.10–ம் கட்டணமாக வசூலிக்கப்படும். பள்ளி மாணவர்கள் இலவசமாக பார்க்கலாம். கேமராவுடன் சென்று படம் எடுக்க கட்டணம்25 ரூபாய். அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்கும் இதே போன்று தனி கட்டணமாக செலுத்த வேண்டும்.

##~~##
தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். திங்கட்கிழமை விடுமுறை. நாளை முதல் பார்வையிடலாம்.
பார்வையாளர்கள் போன்று சமூக விரோதிகள் கலங்கரை விளக்கத்துக்குள் நுழைவதை தடுக்க மெட்டல் டிடெக்டர் வாயல் அமைக்கப்பட்டுள்ளது. அவசர நேரத்தில் பார்வையாளர்கள் வெளியேற மாற்றுப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.