Published:Updated:

அந்தமான் அருகே உருவானது புதிய 'லெஹர்' புயல்!

அந்தமான் அருகே உருவானது புதிய 'லெஹர்' புயல்!
அந்தமான் அருகே உருவானது புதிய 'லெஹர்' புயல்!
அந்தமான் அருகே உருவானது புதிய 'லெஹர்' புயல்!

சென்னை: அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. அதற்கு 'லெஹர்' என பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில், ''அந்தமான் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக மாறியுள்ளது. அந்த புயலுக்கு இந்தியா பரித்துரைத்தபடி 'லெஹர்' என பெயரிடப்பட்டுள்ளது. அந்தமானின் போர்ட் பிளேரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் லெஹர் புயல் மையம் கொண்டுள்ளது. அந்தமானின் போர்ட் பிளேரை லெஹர் புயல் 28ஆம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கும்.

##~~##
புயல் கரையை கடக்கும்போது அந்ததமானில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். தீவிர புயலாக வலுப்பெற்று வரும் லெஹர் புயல் மேற்கு-வடக்மேற்காக நகர்ந்து, ஆந்திராவை நோக்கி செல்லும். புயல் உருவானதையடுத்து, அடுத்த 48 மணி நேரத்திற்கு அந்தமானில் கனமழை பெய்யும். புயல் கரையை கடக்கும் போது அந்தமானில் மரங்கள், குடிசை வீடுகள் சேதமடைய வாய்ப்பு உள்ளது.
புதிய லெஹர் உருவாகியிருப்பதைத் தொடர்ந்து அந்தமானில் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம்'' என கூறப்பட்டுள்ளது.

2 ஆம் எண் புயல் கூண்டு

அந்தமான் அருகே லெஹன் புயல் உருவானதைத் தொடர்ந்து, சென்னை, கடலூர், புதுச்சேரி, நாகை, பாம்பன், தூத்துக்குடி, எண்ணூர் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.