Published:Updated:

தமிழ்நாட்டில் தமிழர்களை அகதிகளாக வைத்திருப்பது கொடுமை: சுதர்சன நாச்சியப்பன்

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் தமிழர்களை அகதிகளாக வைத்திருப்பதைப் போன்ற கொடுமை வேறு எதுவுமில்லை என மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ''இலங்கை அரசும், இந்திய அரசும் வரும் டிசம்பர் மாதம் இரண்டு தரப்பு மீனவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களின் பிரச்னைக்கு சுமூகமான முறையில் தீர்வு காண ஏற்பாடு செய்து வருகிறது. கச்சத்தீவு மீட்க கூடிய இடமல்ல, அது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு  நிலுவையில் உள்ளது. விசாரணை முடிந்து தீர்ப்பு வந்த பிறகுதான் இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

##~~##
தமிழினம் ஒவ்வொரு நாளும் துன்பத்தில் ஆழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழர்களை அகதிகளாக வைத்திருப்பதைப் போன்ற கொடுமை வேறு எதுவும் இல்லை. இதுகுறித்து தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒரே அணியில் நின்று தமிழர்களை நிம்மதியாக வாழ வைப்பதற்கு இந்திய அரசை நிர்பந்திக்க வேண்டும்.
அரசியல் விளையாட்டுக்காக முள்ளிவாய்க்கால் முற்றத்தை பயன்படுத்த கூடாது. தமிழக கட்சிகள் மற்றும் அமைப்புகள் தங்கள் அரசியலுக்காக இலங்கை தமிழர்களை பகடைகாய்களாகப் பயன்படுத்துகின்றனர். அரசியலுக்கும் அன்றாட வாழ்க்கை அலுவல்களுக்கும், பாரம்பரிய மிக்க தமிழ் இனைத்தை பயன்படுத்த வேண்டாம்'' என்றார்.