Published:Updated:

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் ஊழலை கவனிக்க மோடி தவறிவிட்டார்: ராகுல்

விகடன் விமர்சனக்குழு
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் ஊழலை கவனிக்க மோடி தவறிவிட்டார்: ராகுல்
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் ஊழலை கவனிக்க மோடி தவறிவிட்டார்: ராகுல்
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் ஊழலை கவனிக்க மோடி தவறிவிட்டார்: ராகுல்

பெல்லாரி: பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் நடக்கும் ஊழலை கவனிக்க நரேந்திர மோடி தவறிவிட்டார் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையட்டி, பெல்லாரியில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில், அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூறுகையில், ''நாடு முழுவதும் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரம் செய்து வருகிறார். பா.ஜ.க. லஞ்சம், ஊழலுக்கு எதிரான கட்சி என அவர் பிரசாரத்தின் போது கூறி வருகிறார். கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியின் போது முதல்வராக இருந்த எடியூரப்பா ஊழல் வழக்கில் சில காலம் சிறையில் இருந்தது மோடிக்கு தெரியவில்லையா? கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, மோடி அருகில் தான் எடியூரப்பா நின்று கொண்டிருந்தார்.

அதேபோல், பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேசம், சத்தீஷ்கரில் நடைபெறும் ஊழல்களும் அவருக்கு தெரியவில்லை. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் எல்லாம் நடக்கும் ஊழலை கவனிக்க நரேந்திர மோடி தவறி விட்டார்'' என்றார்.