Published:Updated:

ஆ.ராசாவுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ்

Vikatan Correspondent
ஆ.ராசாவுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ்

புதுடெல்லி, டிச.20,2010

2ஜி ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு, முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவுக்கு சி.பி.ஐ. இன்று நோட்டீஸ் அனுப்பியது.##~~##

இதனால், அவரிடம் சி.பி.ஐ. விரைவில் நேரடியாக விசாரணை நடத்தும் என்பது உறுதியாகியுள்ளது.

2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது.

அதில் சிக்கிய அவரது டைரிகளில் இடம்பெற்ற விவரங்களின் அடிப்படையில், அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்களிடம் வீடுகள், அலுவலகங்களில் அண்மையில் சிபிஐ சோதனை நடத்தியது. அதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், தற்போது விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு ஆ.ராசாவுக்கு சி.பி.ஐ இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2ஜி ஊழல் வழக்கில், சி.பி.ஐ மற்றும் அமலாக்கப் பிரிவு ஆகியவை பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி, வரும் பிப்ரவரியில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், இந்த விசாரணைகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் கவனத்துக்குரியது.