Published:Updated:

2ஜி.. பி.ஏ.சி. முன்பு ஆஜராக தயார்: மன்மோகன் சிங்

Vikatan Correspondent
2ஜி.. பி.ஏ.சி. முன்பு ஆஜராக தயார்: மன்மோகன் சிங்

புதுடெல்லி, டிச.20, 2010

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விசாரணையில் பொதுக் கணக்குக் குழு (பி.ஏ.சி.) முன்பு தாம் மகிழ்ச்சியுடன் ஆஜராகத் தயாராக இருப்பதாக, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். ##~~##

டெல்லியில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று, பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு பேசுகையில், 2ஜி விவகாரத்தில் மறைப்பதற்கு ஏதுமில்லை என்று கூறினார்.

வழக்கத்துக்கு மாறாக ஆவேசமாகப் பேசத் தொடங்கிய பிரதமர், நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை அமைப்பதில் எவ்வித அவசியமும் இல்லை என்றார்.

பிஜேபி தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையில் உள்ள பொதுக் கணக்குக் குழுவுக்கே அனைத்து அதிகாரமும் உண்டு என்று குறிப்பிட்ட அவர், 2ஜி ஸ்பெக்டரம் விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணையை வலியுறுத்தி எதிர்கட்சிகள் நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரை முற்றிலும் முடக்கியதாக சாடினார்.

மத்திய அரசுக்கு எதிராக தவறான பிரசாரங்கள் கட்டவிழ்த்துவிடப்படுவதாகவும், 2ஜி விவகாரத்தில் மக்களிடம் மறைப்பதற்கு ஏதுமில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், பி.ஏ.சி. தலைவர் விரும்பும் பட்சத்தில், இந்த விசாரணைக்காக ஆஜராவதற்கு தாம் மகிழ்ச்சியுடன் தயாராக இருப்பதாவும் தெரிவித்தார்.

2ஜி தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கடந்த கடந்த ஆறரை ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக இருந்து இருந்து வரும் தாம், தவறுகள் பலவற்றைச் செய்திருக்கலாம். ஆனால், தன்னால் முடிந்த அளவு தன் நாட்டுக்கு நல்லது எதுவோ அதைச் செய்ய முயன்றிருப்பதாக பிரதமர் கூறினார்.