Published:Updated:

காந்தி பிரிட்டிஷ் உளவாளி: மீண்டும் சர்ச்சையில் கட்ஜூ!

காந்தி பிரிட்டிஷ் உளவாளி: மீண்டும் சர்ச்சையில் கட்ஜூ!
News
காந்தி பிரிட்டிஷ் உளவாளி: மீண்டும் சர்ச்சையில் கட்ஜூ!

காந்தி பிரிட்டிஷ் உளவாளி: மீண்டும் சர்ச்சையில் கட்ஜூ!

காந்தி பிரிட்டிஷ் உளவாளி: மீண்டும் சர்ச்சையில் கட்ஜூ!

புதுடெல்லி: மகாத்மா காந்தி ஒரு பிரிட்டிஷ் உளவாளி என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகி ஓய்வு பெற்றவர் மார்க்கண்டேய கட்ஜூ. இவர், கடந்த 2004ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டது. அவரை நீதிபதியாக நியமிக்க தமிழக அரசியல் கட்சி ஒன்று மத்திய அரசை வற்புறுத்தியது எனக் கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதேபோல், தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் எனவும், பா.ஜ.க. டெல்லி முதல்வர் வேட்பாளர் கிரண்பேடியைவிட சாஷியா இல்மி அழகானவர். அவரை நிறுத்தியிருந்தால் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கும் என்பது போன்ற பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறார். இந்நிலையில், மகாத்மா காந்தி ஒரு பிரிட்டிஷ் உளவாளி என கூறியிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காந்தி பிரிட்டிஷ் உளவாளி: மீண்டும் சர்ச்சையில் கட்ஜூ!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதுகுறித்து அவர் தனது பிளாக்கில், ''இந்த பதிவு எனக்கு பெரிய தொல்லைகளையும், எதிர்ப்புகளையும் கொடுக்கும் என்பது எனக்குத் தெரியும். அது ஒரு பெரிய விஷயமே இல்லை. நான் புகழ் தேடுபவனும் அல்ல. இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதால் எனக்கு பல கண்டனங்களும் வருகிறது. இருப்பினும் நாட்டின் நலன் கருதியே நான் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறேன்.

மகாத்மா காந்தி ஒரு பிரிட்டீஷ் ஏஜண்டாக இருந்தார். மதத்தையும் அரசியலில் புகுத்தி இந்தியாவிற்கு மிகபெரிய தீங்கை செய்து உள்ளார். மேலும், பிரிட்டிஷின் பிரித்தாளும் சூழ்நிலையையும் அவர் முன்னெடுத்து சென்றுள்ளார்.

மகாத்மா காந்தி தொழில் மயமாக்கலுக்கு எதிரானவர். இந்த முட்டாள்தனத்தால் கை நூற்பு இராட்டை அவர் போதித்தார். இதுபோல் அவர் உபதேசித்த கோட்பாடுகள் அனைத்தும் முட்டாள்தனமானது. இது மக்களை ஏமாற்றும் செயல்'' எனக் கூறியுள்ளார்.