Published:Updated:

ப.சிதம்பரத்தை காப்பதை நிறுத்துங்கள்: பிரதமருக்கு பிஜேபி வலியுறுத்தல்

புதுடெல்லி, செப்.28,2011

ப.சிதம்பரத்தை காப்பதை நிறுத்துங்கள்: பிரதமருக்கு பிஜேபி வலியுறுத்தல்

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைக் காக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதை பிரதமர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பிஜேபி கடுமையாக வலியுறுத்தியது.

இதுதொடர்பாக டெல்லியில் இன்று நிருபர்களிடம் பிஜேபி மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில், "சில மாதங்களுக்கு முன்பு ஊழலுக்கு எதிராக போராட உறுதிபூண்டுள்ளதாக கூறிய பிரதமர், இப்போது சிதம்பரத்தைக் காப்பதன் மூலம் தனது உறுதிமொழியை கைவிட்டுவிட்டார்.

'ஆ.ராசா செய்ததையே ப.சி.யும் செய்தார்'

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா செய்த அதே குற்றத்தையே ப.சிதம்பரமும் செய்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிஜேபி மூத்த தலைவர்களான அருண் ஷோரி, ஜஸ்வந்த் சிங் ஆகியோரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உள்துறை அமைச்சரை மட்டும் விட்டுவைப்பது எந்த வகையில் நியாயம்?" என்று கேள்வி எழுப்பினார் சுஷ்மா.

மத்திய நிதி அமைச்சகத்திடம் இருந்து தான் 2ஜி 'குறிப்பு' வந்ததே தவிர, பிஜேபியிடமிருந்தோ அல்லது சி.ஏ.ஜி. இடமிருந்தோ வெளிவரவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஊழலுக்கு எதிரான தனது உறுதிப்பாட்டை நிறைவேற்ற, ப.சிதம்பரத்தை காக்கும் நடவடிக்கையை பிரதமர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சுஷ்மா கேட்டுக்கொண்டார். '

மேலும், முன்கூட்டியே மக்களவைத் தேர்தலை திணிக்க பிஜேபி முயற்சிக்கிறது என்ற பிரதமரின் குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.

அடுத்த கட்டுரைக்கு