Published:Updated:

மாறனுக்கு எதிராக விரைவில் எஃப்.ஐ.ஆர்.: சிபிஐ

மாறனுக்கு எதிராக விரைவில் எஃப்.ஐ.ஆர்.: சிபிஐ
மாறனுக்கு எதிராக விரைவில் எஃப்.ஐ.ஆர்.: சிபிஐ

மாறனுக்கு எதிராக விரைவில் எஃப்.ஐ.ஆர்.: சிபிஐ

புதுடெல்லி, செப்.28,2011

மாறனுக்கு எதிராக விரைவில் எஃப்.ஐ.ஆர்.: சிபிஐ

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எதிராக விரைவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

எஸ்ஸார் நிறுவன அதிகாரிகள் மீதும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

தயாநிதி மாறன் மற்றும் எஸ்ஸார் மீதான குற்றச்சாட்டுக்கள் நாளை மறுதினம் (செப்.30) இறுதி செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ கூறியுள்ளது.

ஏர்செல் நிறுவனத்தை மலேசிய நிறுவனத்துக்கு விற்பனை செய்ததில் தயாநிதி மாறன் பங்கு குறித்த வலுவான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் கூறியுள்ளன.

சி.சிவசங்கரனிடம் இருந்து வாங்கப்பட்ட மலேசிய நிறுவனத்துடன் தயாநிதி மாறனும், அவருடைய சகோதரரும் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது என்று உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ ஏற்கெனவே தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தயாநிதி மாறன் மீது பிரதமர் குற்றச்சாட்டு..

முன்னதாக, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடுக்கு முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் காரணம் என்று பிரதமர் மன்மோகன் சிங் மறைமுகமாக குற்றம்சாட்டினார்.

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி வந்த அவர், விமானத்தில் நிருபர்களிடம் இதுகுறித்து கூறுகையில், "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக விலை நிர்ணயம் செய்ய மத்திய அமைச்சர்களை கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவுக்கு அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஸ்பெக்ட்ரம் தொலைத் தொடர்புத்துறையில் வருவாய் ஈட்டக்கூடிய ஒரு அம்சம். இது மிகவும் சிக்கலான மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை கொண்ட பிரச்னை. இதில் அமைச்சர்கள் குழு தீர்மானிக்க இயலாது. எனவே, இந்த துறையே விலை நிர்ணயம் குறித்து தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும் என்று என்னிடம் தயாநிதி மாறன் வாதிட்டார்.

தயாநிதி மாறனின் கருத்தை ஏற்பதால் எந்த இலக்கும் ஏற்படாது என்ற முடிவுக்கு நான் வந்தேன்," என்றார் பிரதமர்.

அடுத்த கட்டுரைக்கு