Published:Updated:

கனிமொழி ஜாமீன் மனு அக்.17-க்கு தள்ளிவைப்பு

Vikatan Correspondent
 கனிமொழி ஜாமீன் மனு அக்.17-க்கு தள்ளிவைப்பு
கனிமொழி ஜாமீன் மனு அக்.17-க்கு தள்ளிவைப்பு

புதுடெல்லி, அக்.01,2011

 கனிமொழி ஜாமீன் மனு அக்.17-க்கு தள்ளிவைப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், திமுக எம்.பி. கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறவிருந்தது.

இந்த நிலையில், சிபிஐ தரப்பு வழக்கறிஞரும், கனிமொழியின் வழக்கறிஞரும் கேட்டுக்கொண்டதன் பேரில், இந்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது குற்றங்கள் பதிவு செய்வதற்கு முன்பு ஜாமீன் வழங்கக் கூடாது என்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு.

2ஜி வழக்கில் சிபிஐ வரும் 15-ம் தேதி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யக்கூடும் என நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, திமுக எம்.பி. கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரது ஜாமீன் மனு மீது அக்டோபர் 17-ல் விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.