Published:Updated:

2ஜி வழக்கில் புதிய குற்றச்சாட்டு: கனிமொழி எதிர்ப்பு

Vikatan Correspondent
2ஜி வழக்கில் புதிய குற்றச்சாட்டு: கனிமொழி எதிர்ப்பு
2ஜி வழக்கில் புதிய குற்றச்சாட்டு: கனிமொழி எதிர்ப்பு

புதுடெல்லி, அக்.1,2011

2ஜி வழக்கில் புதிய குற்றச்சாட்டு: கனிமொழி எதிர்ப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் தன் மீது சிபிஐ தொடுத்துள்ள புதிய குற்றச்சாட்டுக்கு, திமுக எம்.பி. கனிமொழி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அரசு பதவியில் இருந்து கொண்டு நம்பிக்கை மோசடி செய்தார் என முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ புதிய குற்றச்சாட்டை முன்வைத்தது.

2ஜி வழக்கு முடியும் வரை ஜாமீன் வழங்கப்படாது என்பதும், இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்கக் கூடும் என்பது கவனத்துக்குரியது.

இதன் தொடர்ச்சியாக, தன் மீதான புதிய குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளிக்க ஆ.ராசா மறுத்தார்.

இந்த நிலையில், கனிமொழி மீதான குற்றச்சாட்டுக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று எதிர்ப்பு தெரிவித்துள்ள அவரது வழக்கறிஞர் "சிபிஐ கூற்றுப்படியே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சதியில் கனிமொழி இல்லை," என்று குறிப்பிட்டார்.

மேலும், திமுக எம்.பி. கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிறுவன நிர்வாக அதிகாரி சரத்குமார் ஆகியோருக்கு எதிரான புதிய குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்தில் கோரப்பட்டது.

முன்னதாக, 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது தொடரப்பட்ட புதிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக அக்டோபர் 7-ம் தேதிக்குள் சம்மந்தப்பட்டவர்கள் பதிலளிக்க வேண்டும் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், திமுக எம்.பி. கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சிபிஐ தரப்பு வழக்கறிஞரும், கனிமொழியின் வழக்கறிஞரும் கேட்டுக்கொண்டதன் பேரில், இந்த மனு மீதான விசாரணையை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.