Published:Updated:

கனிமொழி உள்பட 4 பேர் ஜாமீன் கோரி அப்பீல்

விகடன் விமர்சனக்குழு
கனிமொழி உள்பட 4 பேர் ஜாமீன் கோரி அப்பீல்
கனிமொழி உள்பட 4 பேர் ஜாமீன் கோரி அப்பீல்

புதுடெல்லி, நவ.5,2011

கனிமொழி உள்பட 4 பேர் ஜாமீன் கோரி அப்பீல்

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி உள்பட 4 பேர் ஜாமீன் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்தனர்.

கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார், குசேகாவ் ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் பிரைவிட் லிட் இயக்குனர்கள் ஆசிஃப் பால்வா மற்றும் ராஜீவ் அகர்வால் ஆகியோர் சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

முன்னதாக, சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்காத போதிலும் கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேரின் ஜாமீன் மனுக்களை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனால், 2ஜி ஊழல் வழக்கின் விசாரணை முடியும் வரை, அதாவது 5-ல் இருந்து 9 மாதங்கள் வரை அவர்கள் சிறையில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட கனிமொழி, கடந்த மே 20-ல் இருந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.