Published:Updated:

லஞ்ச வழக்கில் சந்திரபாபு நாயுடு தப்ப முடியாது: ஆவேசப்படும் சந்திரசேகர ராவ்!

கரீம் நகர்: லஞ்ச வழக்கில் இருந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தப்ப முடியாது என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறினார்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கரீம் நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''மேல்–சபை தேர்தலில் ஓட்டுக்கு கோடிகள் கொடுத்த லஞ்ச வழக்கை திசை திருப்ப ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முயற்சித்து வருகிறார். இந்த வழக்கில் சட்டத்துக்கு அப்பாற்பட்டு எந்த காரியத்தையும் இந்த சந்திரசேகர ராவ் செய்யமாட்டான். சட்டப்படித்தான் அனைத்து விசாரணையும் நடக்கிறது. இந்த பிரச்னையை இரு மாநில பிரச்னை போல் சந்திரபாபு நாயுடு சித்தரிக்க பார்க்கிறார்.

ஆந்திர மக்கள் புத்தசாலிகள். அவர்கள் இதனை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். எனது ஓராண்டு ஆட்சியில் தெலங்கானாவில் உள்ள ஆந்திர மக்கள் தாக்கப்பட்டதாக எந்த புகாரும் இல்லை. ஆந்திரா–தெலங்கானா மக்கள் அண்ணன் தம்பிகளாக பழகி வருகிறார்கள். அவர்களுக்கிடையே பிரச்னையை ஏற்படுத்த சந்திரபாபு நாயுடு முயற்சிக்கிறார்.

லஞ்ச வழக்கில் இருந்து சந்திரபாபு நாயுடு தப்ப முடியாது. அவரை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு காப்பாற்ற முயற்சி செய்யாது. ஏனெனில் ஊழலற்ற ஆட்சியை அமைப்பேன் என்று கூறிதான் மோடி ஆட்சியை பிடித்தார். அதனால், ஊழல் பிரச்னையில் சிக்கியுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு மோடி ஆதரவளிப்பார் என்று நான் கருதவில்லை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு