Published:Updated:

தமிழக - கேரள எல்லையில் நில அதிர்வுகள்

Vikatan Correspondent

தேனி: தமிழக - கேரள எல்லையோரம் அமைந்துள்ள இடுக்கியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு முறை நில அதிர்வுகள் ஏற்பட்டது.

அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட நில அதிர்வு, ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவானது. தொடர்ந்து, 5.45 மணிக்கு மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. அது, 3.2 என்ற ரிக்டர் அளவில் இருந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வண்டிப்பெரியார், உப்புதுறை, வாகமன், ஐயப்பன் கோயில், குமுளி உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால், அப்பகுதி மக்களிடையே பீதி நிலவியது.

எனினும், இந்த நில அதிர்வுகளால் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இப்பகுதியில் உள்ள முல்லை பெரியாறு அணைக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.