Published:Updated:

'லோக்பால் கீழ் சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவை சேருங்கள்'

Vikatan Correspondent
'லோக்பால் கீழ் சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவை சேருங்கள்'
'லோக்பால் கீழ் சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவை சேருங்கள்'
'லோக்பால் கீழ் சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவை சேருங்கள்'

புதுடெல்லி: லோக்பால் விசாரணை வரம்புக்குள் சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவையும் கொண்டு வர வேண்டும் என்று அண்ணா ஹஜாரே குழு வலியுறுத்தியுள்ளது.

'லோக்பால் அமைப்புக்கு ஊழல் தொடர்பான புகார்கள் வரும்போது, அதனை சிபிஐ விசாரணைக்கு அனுப்ப வேண்டும்; பின்னர், விசாரணை முடிந்ததும் அந்த வழக்கு நீதிமன்றத்துக்கு லோக்பால் மூலம் அனுப்பப்பட வேண்டும்,' என்கிற ரீதியில் நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், "லோக்பால் விசாரணை வரம்புக்குள் சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு கொண்டு வரப்பட்டால் மட்டுமே, அச்சட்டம் முழுமையடையும்," என்று அண்ணா ஹஜாரே குழுவின் அரவிந்த் கேஜரிவால் கூறினார்.

மேலும், "அவ்வாறு சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவை கொண்டுவராவிட்டால், ஊழல் தொடர்பான புகார்களை சிபிஐ-க்கும், நீதிமன்றத்திற்கும் அனுப்பும் நடைமுறையால், லோக்பால் அமைப்பு வெறும் தபால் நிலையங்கள் போன்றதாகிவிடும்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.