Published:Updated:

2ஜி வழக்கு விசாரணை திகார் சிறைக்கு மாற்றம்!

2ஜி வழக்கு விசாரணை திகார் சிறைக்கு மாற்றம்!
2ஜி வழக்கு விசாரணை திகார் சிறைக்கு மாற்றம்!
2ஜி வழக்கு விசாரணை திகார் சிறைக்கு மாற்றம்!

புதுடெல்லி: பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு இனி திகார் சிறை வளாகத்திலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு தொடர்பான தகவலை, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி இன்று 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் தெரிவித்தார்.

இந்த முடிவுக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்பட அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குற்றம்சாட்டபட்டவர்களின் வழக்கறிஞர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த அறிவிப்புக்கு தடைவிதிக்கக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.