Published:Updated:

தமிழகமும் கேரளாவும் பேசிதான் தீர்க்க வேண்டும்: ஆளுனர்

தமிழகமும் கேரளாவும் பேசிதான் தீர்க்க வேண்டும்: ஆளுனர்

தமிழகமும் கேரளாவும் பேசிதான் தீர்க்க வேண்டும்: ஆளுனர்

தமிழகமும் கேரளாவும் பேசிதான் தீர்க்க வேண்டும்: ஆளுனர்

Published:Updated:

சென்னை: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இரு தரப்பினரும் பேசிதான் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்று ஆளுனர் ரோசய்யா கூறினார்.

இந்திய கடற்படை வார விழாவையொட்டி, சென்னை அருகே கடற்படை வீரர்களின் சாகசங்களை ஆளுனர் ரோசய்யா தனது குடும்பத்தினருடன் கண்டு களித்தார்.

இந்நிகழ்ச்சி முடிந்ததும் நிருபர்களிடம் அவர் கூறுகையில், "நான் 2-வது முறையாக இந்திய கடற்படை விழாவில் கலந்து கொண்டு கப்பலில் பயணம் செய்கிறேன். கடந்த முறை மும்பையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு கப்பலில் பயணம் செய்தேன். எனக்கும் கப்பலின் மேல் தட்டுக்கு வந்து பார்வையிட வேண்டும் என்று ஆசைதான். இருந்தாலும் வயதாகி விட்டதால் வரமுடியவில்லை.

இந்திய கடற்படை மிகவும் பலம் வாய்ந்தது. தொழில் நுட்பத்திலும், பலத்திலும் மிகவும் சக்தி வாய்ந்ததாக உள்ளது. தற்போது ஐ.என்.எஸ்.ஷிவாலிக் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் சேர்ந்திருப்பதால், கடற்படை மேலும் வலுப்பெற்று உள்ளது. இதனால், தொழில்நுட்ப ரீதியாகவும் கடற்படை பலம் அடைந்துள்ளது," என்றார்.

முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து கேட்டதற்கு, "இந்த அணை விவகாரம் என்பது தெருவில் அடித்துக்கொள்ள வேண்டிய விஷயம் இல்லை. இரு தரப்பினரும் அமர்ந்து பேசி முடிவு காணப்பட வேண்டிய விஷயமாகும். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்துக்கு விரைவில் சுமுக தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன்," என்றார் ஆளுனர் ரோசய்யா.