Published:Updated:

ஜன. 18-ல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடக்கம்

விகடன் விமர்சனக்குழு
ஜன. 18-ல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடக்கம்
ஜன. 18-ல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடக்கம்
ஜன. 18-ல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடக்கம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர், ஜனவரி 18-ம் தேதி ஆளுனர் ரோசய்யா உரையுடன் தொடங்குகிறது.

இதுகுறித்து, சட்டமன்ற செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் வெளியிட்டுள்ள அரசாணையில்,

'தமிழக சட்டப்பேரவை ஜனவரி மாதம் 18-ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சட்டமன்ற அரங்கில் கூடுகிறது. இதற்கான அறிவிப்பை கவர்னர் கே.ரோசய்யா வெளியிட்டுள்ளார்,' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத் தொடரின் முதல் நாளில் ஆளுனர் ரோசய்யா உரையாற்றுகிறார். தமிழக அரசின் நலத் திட்டங்கள் குறித்தும், எதிர்வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படப் போகும் திட்டங்கள் பற்றியும் ஆளுநர் உரையாற்றக்கூடும் எனத் தெரிகிறது.

ஆளுனராகப் பொறுப்பேற்ற பிறகு பேரவையில் ரோசய்யா முதல் முறையாக உரையாற்ற உள்ளார்.

ஆளுனரின் உரையைத் தொடர்ந்து, பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவெடுக்கும்.

ஒரு வாரம் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேசுவர். இந்த விவாதத்துக்கு அரசின் சார்பில் பதில் அளிக்கப்படும். இதன்பின் கூட்டம் ஒத்திவைக்கப்படும்.

இந்தக் கூட்டத் தொடரைத் தொடர்ந்து, பிப்ரவரி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.