Published:Updated:

முல்லைப் பெரியாறு: மத்திய அரசைக் கண்டித்து அதிமுக செயற்குழுவில் தீர்மானம்

விகடன் விமர்சனக்குழு

சென்னை: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்‍குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்‍குழு கூட்டம் சென்னை - வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் பிற்பகல் 2 மணி அளவில் தொடங்கியது.

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா கலந்துகொண்ட இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில், கட்சியின் நலனுக்காக முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் எவ்வித நடவடிக்கைகள் மற்றும் முடிவுகளுக்கும் ஆதரவு தருவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முல்லைப் பெரியாறு விவகாரத்திலும், தமிழகத்துக்கு நிதி தருவதற்கு மறுத்ததற்கும் மத்திய அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தேவை; மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவுக்கு கண்டனம் தெரிவித்தும் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.