Published:Updated:

தூத்துக்குடியில் பெண் டாக்டர் கொலை: அரசு மருத்துவர்கள் ஸ்டிரைக்

Vikatan Correspondent

சென்னை: தூத்துக்குடியில் சேதுலட்சுமி என்ற பெண் டாக்டர் கொல்லப்பட்டதைக் கண்டித்து, மாநிலம் தழுவிய அளவில் அரசு மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர் சேதுராமலட்சுமியின் தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்ற மகேஷ் என்பவரின் மனைவி உயிரிழந்தார்.

அதன் தொடர்ச்சியாக, சேதுராமலட்சுமி நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுனர் மகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி மருத்துவர் சேதுலட்சுமி கொல்லப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் இன்று காலை 7 மணி தொடங்கி, ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மருத்துவப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 26,000 அரசு மருத்துவர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.