Published:Updated:

ஊரக சுகாதார திட்டத்தில் ஊழல்: உ.பி.யில் சிபிஐ அதிரடி சோதனை

Vikatan Correspondent

லக்னோ: தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக பதிவான புகாரை தொடர்ந்து, உத்தரபிரதேச முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் பாபுசிங் குஷ்வாகா வீடு உள்பட 60 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

முன்னதாக, ஊழல் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் பாபுசிங் குஷ்வாகாவை அண்மையில் அமைச்சர் பதவியிலிருந்து முதல்வர் மாயாவதி அண்மையில் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக வந்த குற்றச்சாட்டுக்களை
தொடர்பாக 5 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதில், முன்னாள் அமைச்சர் பாபுசிங் குஷ்வாகா மீதும் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் இன்று உத்தர பிரதேசத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் பாபுசிங் குஷ்வாகா வீடு உள்பட மாநிலத்தின் 60 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. 

அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து குஷ்வாகா நேற்று பிஜேபியில் இணைந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.