Published:Updated:

அறிவிப்பு: ஃபேஸ்புக்கில் விடிய விடிய 'வைகுண்ட ஏகாதசி' - விகடனின் சிறப்பு கவரேஜ்!

Vikatan Correspondent

நாளை 5.1.12 அன்று இரவு வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, ஃபேஸ்புக் வாயிலாக விடிய விடிய விழித்திருந்து, அரங்கனின் பெருமைகளைப் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளோம்.

உபந்யாசகர் நாகை முகுந்தன், ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் கைங்கர்யம் செய்யும் முரளிபட்டர், பட்டிமன்றப் பேச்சாளர் முனைவர் சேகர் மற்றும் பலரும் அரங்கனின் பெருமைகளை செவிகுளிரச் சொல்ல, அந்த வீடியோ பதிவுகளைப் பார்க்கலாம்; ஸ்ரீரங்கம் கோயிலையும் தரிசிக்கலாம்.

முன்னதாக, பரமபத வாசல் திறப்பைச் சிலிர்க்கச் சிலிர்க்க சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் தரிசிக்கலாம்!

நாளை இரவு பரமனின் புகழைச் சொல்லி ஆராதிக்க நாங்கள் தயாராகி விட்டோம். ஸ்ரீரங்கத்தில் இம்முறை நேரில் சென்று தரிசிக்க இயலாதோர், வெளிநாடு வாழ் தமிழ் நெஞ்சங்களுக்காக சக்தி விகடன் டீம் இந்தப் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இந்திய நேரப்படி, வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை வரை சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கமான www.facebook.com/sakthivikatan-ல் இணைந்திருப்போம்!