Published:Updated:

நோட்டீஸ் எதிரொலி: 'வாய்தவறி' பேசியதாக சொல்கிறார் பேனி!

நோட்டீஸ் எதிரொலி: 'வாய்தவறி' பேசியதாக சொல்கிறார் பேனி!
நோட்டீஸ் எதிரொலி: 'வாய்தவறி' பேசியதாக சொல்கிறார் பேனி!

நோட்டீஸ் எதிரொலி: 'வாய்தவறி' பேசியதாக சொல்கிறார் பேனி!

நோட்டீஸ் எதிரொலி: 'வாய்தவறி' பேசியதாக சொல்கிறார் பேனி!

புதுடெல்லி: தேர்தல் விதிமுறைகளை மீறி, சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியதாக, மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், தாம் 'வாய்தவறி' பேசியிருக்கக் கூடும் என்று பேனி பிரசாத் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் இன்று நிருபர்களிடம் கூறுகையில், "நான் தினமும் நான்கு, ஐந்து இடங்களில் பேசுகிறேன். நான் என்ன பேசினேன் என்பது குறித்து கவனம் வைத்துக்கொள்ள முடிவதில்லை. நான் தேர்தல் ஆணையத்தை மதிக்கிறேன். ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும்," என்றார் அவர்.

முன்னதாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய இரும்பு உருக்குத்துறை அமைச்சர் பேனி பிரசாத் வர்மா, இஸ்லாமியர்களுக்கு உள் ஒதுக்கீடு நிச்சயமாக உயர்த்தப்படும் என்றும், அதுதொடர்பாக, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தாலும் கவலை இல்லை என்றும் அவர் பேசியிருக்கிறார்.

இதுதொடர்பாக, டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை நேற்று சந்தித்த பிஜேபியினர், மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா மீது புகார் தெரிவித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

இஸ்லாமியர்களுக்கு உள் ஒதுக்கீடு உயர்த்தப்படும் என வாக்குறுதி விவகாரத்தில், மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தை தொடர்ந்து பேனி பிரசாத் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு