Published:Updated:

காமன்வெல்த் ஊழல்: சுவிஸ் நிறுவன மனு தள்ளுபடி

காமன்வெல்த் ஊழல்: சுவிஸ் நிறுவன மனு தள்ளுபடி
காமன்வெல்த் ஊழல்: சுவிஸ் நிறுவன மனு தள்ளுபடி
காமன்வெல்த் ஊழல்: சுவிஸ் நிறுவன மனு தள்ளுபடி

புதுடெல்லி: காமன்வெல்த் போட்டி ஊழல் வழக்‍கு விசாரணைக்‍கு தடை விதிக்‍கக்‍கோரி, சுவிஸ் நிறுவனம் தாக்‍கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

டெல்லியில் கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்‍காக, உள்கட்டமைப்பு வசதிகள் அமைப்பதில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்தது கண்டுபிடிக்‍கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி அமைப்புக்குழுத் தலைவர் சுரேஷ் கல்மாடி உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்களில் சுரேஷ் கல்மாடி உட்பட பலர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில், சுவிஸ் டை​மிங்ஸ் என்ற நிறுவனம் 90 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்ததாக அந்த நிறுவனத்தின் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்‍கில் விசாரணைக்‍குத் தடை விதிக்‍க வேண்டுமென்று சுவிஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் மனுத் தாக்‍கல் செய்திருந்தது.

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அதனை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது