Published:Updated:

தமிழகத்துக்கு 10 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிவிப்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தமிழகத்துக்கு 10 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிவிப்பு
தமிழகத்துக்கு 10 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிவிப்பு

தமிழகத்துக்கு 10 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்துக்கு 10 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிவிப்பு

புதுடெல்லி: ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு புதிதாக 10 எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மக்களவையில் இன்று 2012-13 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை, அமைச்சர் தினேத் திரிவேதி இன்று தாக்கல் செய்தார்.

இதில், தமிழகத்துக்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ரயில்கள் மற்றும் நீட்டிக்கப்படும் சேவைகளின் விவரம்:

* கோவை – பிகானீர் எக்ஸ்பிரஸ் : கோவையிலிருந்து அகமதாபாத், ஜோத்பூர் வழியாக பிகானீக்கு முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ரயில் வாரம் ஒரு முறை இயக்கப்படும்.

* சென்னை – பெங்களூரு வழித்தடத்தில் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இரண்டு அடுக்கு விரைவு ரயில் தினமும் இயக்கப்படும்.

 சென்னை - பூரி (ஒடிஷா) இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ்.

* திருச்சி – நெல்லை இடையே தினமும் இன்டர்சிட்டி ரயில்.

* விசாகப்பட்டினம் – சென்னை வாராந்திர விரைவு ரயில்.

* கச்சிக்குடா – மதுரை இடையே வாராந்திர விரைவு ரயில்.

* ஷாலிமார் – சென்னை இடையே வாராந்திர விரைவு ரயில்.

* மன்னார்குடியில் இருந்து திருவாரூர், விழுப்புரம், காட்பாடி வழியாக திருப்பதிக்கு விரைவு ரயில். இது, வாரம் மூன்று முறை இயக்கப்படும்.

* விழுப்புரம் - காட்பாடி இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்.

* விழுப்புரம் – மயிலாடுதுறை இடையே தினசரி பயணிகள் ரயில்.

* பாலக்காடு – கோவை – ஈரோடு மார்க்கத்தில் மெயின்லைன் எலெக்ட்ரிக்கல் மல்டிப்பிள் ரயில்.

* மன்னார்குடி – திருச்சி – மானாமதுரை டீசல் எலெக்ட்ரிக்கல் மல்டிப்பிள் ரயில்.

* ஈரோடு - கோவை வழியாக தாதர் - திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் இயக்கப்படும். 

* நிஜாமுதீன் - கன்னியாகுமரி வாராந்திர எக்ஸ்பிரஸ் வாரம் 2 முறை இயக்கப்படும்.


* திருப்பதி - மதுரை எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு.

* மங்களூர் - பாலக்காடு எக்ஸ்பிரஸ், கோவை வரை நீட்டிப்பு.

* மங்களூர் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு.

* திருச்சி - நாகூர் பயணிகள் எக்ஸ்பிரஸ் நாகப்பட்டிணம் வரை நீட்டிப்பு.

* அரக்கோணம் - நந்தலூர் ரெயில் கடப்பா வரை நீட்டிப்பு.

* மதுரை - திருப்பதி வாரம் 2 நாள் இயங்கும் எக்ஸ்பிரஸ் 3 நாட்களாக அதிகரிப்பு.

சென்னை மெட்ரோ ரயில் எப்போது?

சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் அடுத்த ஆண்டு (2013) நிறைவடையும் என்று ரயில்வே அமைச்சர் திரிவேதி அறிவித்தார்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு