Published:Updated:

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை கடற்படை எச்சரிக்கை

Vikatan Correspondent
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை கடற்படை எச்சரிக்கை
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை கடற்படை எச்சரிக்கை
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை கடற்படை எச்சரிக்கை

ராமேஸ்வரம்:எல்லை தாண்டி வந்தால் கைது செய்வோம் என்று ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
ராமேச்வரத்தில் இருந்து கடந்த 4 ம் தேதியன்று, சுமார் 300 விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள்  நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது வழக்கம்போல் அங்கு திடீரென வந்த இலங்கை கடற்படையினர்,   ராமேஸ்வரம் மீனவர்களை, அங்கிருந்து விரட்டி அடித்தனர்.
 
இதனால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
 
கடந்த 4ம் தேதி கச்சத்தீவு அருகே  மீன் பிடிக்க சென்றபோது 4 போர்க் கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர்,   எங்களது படகுகளை மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கியை காட்டி மிரட்டினர். 
 
இனிமேல் இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்க,  இலங்கை எல்லைக்குள் வந்தால் கைது செய்து சிறையில் அடைத்து  விடுவோம் என எச்சரித்தனர். இதனால் நாங்கள் தொடர்ந்து மீன் பிடிக்காமல் கரை திரும்பினோம்" என்றனர்.