Published:Updated:

கு‌ண்டாஸ்க்கு எதிராக வீரபாண்டி ஆறுமுகம் மனைவி மனு!

கு‌ண்டாஸ்க்கு எதிராக வீரபாண்டி ஆறுமுகம் மனைவி மனு!
கு‌ண்டாஸ்க்கு எதிராக வீரபாண்டி ஆறுமுகம் மனைவி மனு!
கு‌ண்டாஸ்க்கு எதிராக வீரபாண்டி ஆறுமுகம் மனைவி மனு!

சென்னை: திமுக மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் தடுப்பு  சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி அவரது மனை‌வி சென்னை  உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளா‌ர். ‌‌

இது தொடர்பாக வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவி லீலா தாக்கல் செய்துள்ள மனு‌வி‌ல்,  ”எனது கணவர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது `வீடு ஆக்கிரமிப்பாளர்' என்ற பிரிவின்  கீழ் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.இதற்கான உத்தரவை  18.6.12 அன்று சேலம் போலீஸ் கமிஷனர் பிறப்பித்துள்ளார்.

ஆனால் அவரது செயல்பாடுகள் எதுவும் அந்த குற்றப்பிரிவின் கீழ் வரவில்லை.அவரது  செயலால் பொது அமைதி பாதிக்கப்பட்டது என்று கூறுவதை ஏற்க முடியாது.இந்த  உத்தரவை பிறப்பிப்பதற்கான காரணமாக,அவர் மீது கூறப்பட்டுள்ள வழக்குக்கும்,  அவருக்கும் நேரடி தொடர்பு கிடையாது.

560 பக்கங்களை கொண்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து கமிஷனர் இந்த  உத்தரவை பிறப்பித்துள்ளார்.அதில் பெரும்பாலான ஆவணங்கள் தமிழில் உள்ளன.  கமிஷனர் தமிழர் அல்ல.வேறு மாநிலத்தை சேர்ந்தவர்.அவருக்கு தமிழை வாசிக்கவோ,  எழுதவோ தெரியாது.

அப்படி இருக்கும்போது அவர் அத்தனை ஆவணங்களையும் ஒரே நாளில் படித்து,அதில்  திருப்தி அடைந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வீரபாண்டி ஆறுமுகத்தை அடைக்க  எப்படி உத்தரவிட முடியும்? எனவே மனதை செலுத்தாமல்,எந்திரத்தனமாக  உத்தரவிட்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது.

சில ஆவணங்களை படித்துப் பார்க்காமலேயே உத்தரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.  உள்நோக்கத்தோடு உத்தரவுகளை பிறப்பித்து வீரபாண்டி ஆறுமுகத்தை ‌சிறையில்  அடைத்துவிட்டனர்.எனவே அந்த உத்தரவை சட்டத்துக்கு புறம்பானது என்று அறிவித்து  அதை ரத்து செய்ய வேண்டும்” எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்த மனு இ‌ன்று ‌விசாரணை‌க்கு வரு‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.