Published:Updated:

கூடுதல் மின்வெட்டு ஏன்? தமிழக மின் உற்பத்திக் கழகம் விளக்கம்

கூடுதல் மின்வெட்டு ஏன்? தமிழக மின் உற்பத்திக் கழகம் விளக்கம்
கூடுதல் மின்வெட்டு ஏன்? தமிழக மின் உற்பத்திக் கழகம் விளக்கம்

சென்னை: மின் உற்பத்தியின் அளவு குறைந்ததால்தான்,தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கூடுதல் மின் வெட்டு அமலாகிறது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,"தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த ஜூன் 26-ம் தேதி மின் தேவை 11,283 மெகா வாட் அளவை எட்டியது.

கூடுதல் மின்வெட்டு ஏன்? தமிழக மின் உற்பத்திக் கழகம் விளக்கம்

காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்ததால் மாநிலத்தின் மின் தேவையை மின் தடை செய்யாமல் பூர்த்தி செய்ய முடிந்தது. முதல்வரின் ஆணைப்படி காவிரி டெல்டா பகுதிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.

 காற்றாலை மின் உற்பத்தியில் ஏற்ற-இறக்கம்: இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக காற்றாலை மின் உற்பத்தி நாளுக்கு நாள் 60 மில்லியன் யூனிட் முதல் 82 மில்லியன் யூனிட் வரை வேறுபடுகிறது. இதனால் காற்றாலையிலிருந்து பெறப்படும் மின்சார அளவு நிலையாக இல்லை. ஒருநாள் கூடுகிறது, ஒருநாள் குறைகிறது. தென்மேற்கு பருவ மழை தாமதமானதாலும், மேட்டூர் அணையிலிருந்து காவிரி பாசனத்துக்காகத் திறந்து விடப்படும் நீர் உரிய நேரத்தில் விடப்படாததாலும் புனல் மின் உற்பத்தியும் வெகுவாகக் குறைந்துள்ளது.

மேலும் மாநில, மத்திய மின் நிலையங்களில் ஏற்படும் பராமரிப்பு மற்றும் எதிர்பாராத பழுதுகள் காரணமாகவும் மின் உற்பத்தி குறைகிறது.

இதனால் மாநிலத்தில் கூடுதலாக மின் தடை செய்யப்படுகிறது. கூடங்குளம், வட சென்னை, வள்ளூர் கூட்டு முயற்சி அனல் மின் திட்டம், மேட்டூர் நிலை - 3 மற்றும் புனல் மின் உற்பத்தி திட்டங்கள் மூலம் மின் உற்பத்தி தொடங்கும்போது தமிழகத்தில் மின் பற்றாக்குறை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.