Published:Updated:

மருத்துவ படிப்புக்கான கல்விக்கட்டணம் வெளியீடு!

மருத்துவ படிப்புக்கான கல்விக்கட்டணம் வெளியீடு!
மருத்துவ படிப்புக்கான கல்விக்கட்டணம் வெளியீடு!
மருத்துவ படிப்புக்கான கல்விக்கட்டணம் வெளியீடு!

சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ்  மருத்துவ படிப்புக்கான புதிய  கல்விக்கட்டணத்தை நீதிபதி பாலசுப்ரமணியன் கமிட்டி வெளியிட்டுள்ளது.

கோவை பி.எஸ்.ஜி, ஸ்ரீ மூகாம்பிகா, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மற்றும் கற்பக  விநாயகர் ஆகிய கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கான கட்டணம் ரூ.2.80 லட்சமாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தாகூர் மற்றும் முத்துகுமார் தனலட்சுமி கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கான கட்டணம்  ரூ.2.60 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்காத கல்லூரிகள் படிப்புக்கான  கட்டணம் ரூ.2.30 லட்சம் வசூலிக்கலாம் என்று அக்கமிட்டி அறிவித்துள்ளது.

10 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணமும் வெளியிடப்பட்டுள்ளது.

பல் மருத்துவப் படிப்புக்கான கட்டணம்:

பல் மருத்துவப் படிப்புக்கான ஆண்டுக் கட்டணம் அனைத்துக் கல்லூரிகளிலும் ஒரு  லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புக்கான கல்வி கட்டணம் விரைவில் அறிவிக்கப்படும் என்று  பாலசுப்ரமணியன் கமிட்டி அறிவித்துள்ளது.