Published:Updated:

சென்னையில் 1000 இடங்களில் நவீன பிளாஸ்டிக் கழிவறைகள்!

சென்னையில் 1000 இடங்களில் நவீன பிளாஸ்டிக் கழிவறைகள்!
சென்னையில் 1000 இடங்களில் நவீன பிளாஸ்டிக் கழிவறைகள்!
சென்னையில் 1000 இடங்களில் நவீன பிளாஸ்டிக் கழிவறைகள்!

சென்னை: சென்னையில் 1000 இடங்களில் நவீன பிளாஸ்டிக் கழிவறைகளை தனியார்  நிறுவனம் மூலம் மாநகராட்சி அமைக்க உள்ளது.

சென்னைக்கு தினமும் லட்சக்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில்,  அதற்கேற்றபடி கழிவறைகள் இல்லை.இது குறித்து நீண்டகாலமாகவே புகார் கூறப்பட்டு  வருகிறது.

இந்நிலையில் சென்னை நகரில் 1000 இடங்களில் 5000 நவீன பிளாஸ்டிக்  கழிவறைகளை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.இந்த நவீன  கழிப்பறைகள் பாலி எத்திலின், பாலி கார்பனேட் அல்லது அதற்கு இணையான  பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டதாக இருக்கும் என்று மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன்  தெரிவித்துள்ளார்.

தேவைக்கேற்ப ஒரு இடத்தில் நான்கைந்து கழிப்பறைகள் வரை வைக்கப்படும்.இந்த  கழிவறைகள் மின்வசதி,தண்ணீர் வசதியுடன் காற்றோட்டமாக இருக்கும் வகையில்  தயாரிக்கப்படுகிறது.கட்டுதல், பராமரித்தல்,ஒப்படைத்தல் முறையில் கழிப்பறைகள்  அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
 
10 ஆண்டுகள் வரை தனியார் பராமரிப்பில் இந்த கழிவறைகள் செயல்படும்.இந்த  கழிவறைகள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.வருகிற 20-ம் தேதி டெண்டர் இறுதி  செய்யப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.