Published:Updated:

காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பதால் மின்தடை குறைப்பு!

காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பதால் மின்தடை குறைப்பு!
காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பதால் மின்தடை குறைப்பு!
காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பதால் மின்தடை குறைப்பு!

சென்னை: காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பதால் மின்தடை குறைக்கப்பட்டுள்ளதாக  தமிழக மின் துறை அமைச்சர் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,"தமிழ்நாட்டின் ஒரு நாளில் அதிகபட்ச  மின் பயனீட்டளவாக 248 மில்லியன் யூனிட் என்ற அளவை 24.07.2012 அன்றும்  அதிகபட்ச மின் தேவையாக 11283 மெகாவாட்டை 26.06.2012 அன்றும்  எட்டியுள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தின் மின் உற்பத்தியை அதிகப்படுத்தியும், மே  மாதம் முதல் கிடைக்கும் காற்றாலை மின் உற்பத்தியை முழுவதும் பயன்படுத்தியும் மின்  பயனீட்டாளர்களுக்கு  இயன்ற அளவிற்கு  மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வரின் ஆணையின்படி காவிரி டெல்டா பாசன விவசாய மின்  பயனீட்டாளர்களுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் 17.06.2012 முதல்  வழங்கபட்டு வருகிறது .

தென்மேற்கு பருவ மழை பொய்த்ததால் அனைத்து புனல் மின் நிலையங்களுக்கான நீர்  தேக்கங்களில் தண்ணீர் முற்றிலும் இல்லாததாலும், நிலையற்ற காற்றாலை மின்  உற்பத்தின் காரணமாகவும், மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்படும் எதிர்பாராத  பழுதின் காரணமாகவும், ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளை கட்டாயமாக  கடைபிடிக்க வேண்டிய நிர்பந்தங்களாலும், தற்போதைய மின் நிலைமையை சமாளிப்பது  பெரும் சவாலாகவே உள்ளது.

எனினும் மேற்கண்ட அனைத்து இடையூறுகளையும் சமாளித்து தமிழ்நாடு மின்வாரியம்  தனது பயனீட்டாளர்களுக்கு அதிக பட்ச மின் விநியோகம் செய்ய அனைத்து  நடவடிக்கைகளையும் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது  

கடந்த ஐந்து தினங்களாக காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்துள்ளதாலும், தமிழ்நாடு  முழுவதும் பரவலாக பெய்த மழை காரணமாகவும் மின்தடை நேரம் குறைக்கப்பட்டது.  சில நாட்களில் முழுவதுமாக மின்தடை ஏதுமின்றி மின்சாரம் வழங்கப்பட்டது.காவிரி  டெல்டா பகுதி நீங்கலாக ஏனைய விவசாய மின் பயனீட்டாளர்களுக்கும் இயன்ற  அளவிற்கு கூடுதல் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது.

மாநில அரசு, நடைமுறையிலுள்ள புதிய மின்திட்டங்களான வடசென்னை,வள்ளூர்  கூட்டு முயற்சி  அனல் மின் திட்டம் மற்றும் மேட்டூர் நிலை-3 ஆகிய மின்  திட்டங்களின் பணிகளை கூர்ந்து கண்காணித்து துரிதமாக செயல்பட நடவடிக்கை எடுத்து  வருகிறது.எனவே மேற்கூறிய மின் திட்டங்கள்  மின் உற்பத்தியை தொடங்கும் போது  தமிழகத்தின் மின் நிலைமை சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது”என்று கூறியுள்ளார்.