Published:Updated:

வடமாநிலம் போன்று தமிழகத்தில் மின்தடை ஏற்படுமா?

வடமாநிலம் போன்று தமிழகத்தில் மின்தடை ஏற்படுமா?
வடமாநிலம் போன்று தமிழகத்தில் மின்தடை ஏற்படுமா?
வடமாநிலம் போன்று தமிழகத்தில் மின்தடை ஏற்படுமா?

சென்னை: வடமாநிலங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான மின்தடை போல்  தமிழகத்தில் ஏற்படாமலிருக்க, மின் கட்டமைப்பு பணிகளை முறையாக பராமரித்து  வருகிறது என்று தமிழ்நாடு மின தொடரமைப்புக் கழகம் தெரிவித்துள்ளது,

இதுகுறித்து தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது:

வடமண்டல மின் கட்டமைப்பில் ஏற்பட்ட எதிர்பாராத மின் தடையால் டெல்லி, பஞ்சாப்,  ஹரியானா,இம்மாசல பிரதேசம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர்  மற்றும் ராஜஸ்தான் ஆகிய எட்டு வடமாநிலங்களில் மின் விநியோகம் முழுவதும்  பாதிக்கப்பட்டது. இதனால் டெல்லி மாநகர ரெயில் போக்குவரத்து மற்றும் குடிநீர்  விநியோகம் அனைத்தும் பாதிப்பிற்குள்ளானது. டெல்லி விமான நிலையத்தில்  அத்தியாவசியமான தேவைகள் ஜெனரேட்டர்கள் மூலம் மின்தேவை பூர்த்தி  செய்யப்பட்டது.

ஆக்ரா அருகில் 400 கிலோ வால்ட் மின்தொடரமைப்பில் ஏற்பட்ட பழுதே இந்த  மின்தடைக்கு காரணம் என்று முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பருவ  மழையின்மையினால் தற்போது நடவுகாலத்தில் விவசாயிகள் நிலத்தடி நீரையே  விவசாயத்திற்கு அதிகம் பயன்படுத்துவதால் கடந்த சில நாட்களாக மின்கட்டமைப்பின்  மொத்த மின்தேவை அதிகரித்துள்ளது.

கண்காணிப்பு

இம்மாதிரியான நிலைமையை தவிர்க்க தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா,  மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய தென்மாநிலங்களிணைந்த மின்கட்டமைப்பை, மத்திய  அரசின் நிறுவனமான பெங்களூருவில் உள்ள தென் மண்டல மின் அனுப்புகை மையம்  கண்காணித்து வருகிறது. தென்மண்டல மின்கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும்  ஒழுங்கினை, இந்திய மின்கட்டமைப்பின் 2010 விதிகளின்படி இயக்க வேண்டி  தென்மண்டல கட்டமைப்பின் கீழ் வரும் மாநிலங்கள் தங்கள் மின் பளுவை கட்டுப்படுத்தி,  தென் மண்டல கட்டமைப்பின் அதிர்வெண்ணை 49.5க்கு மேல் இயக்குமாறு  கண்காணித்து வருகிறது.

##~~##
தமிழ்நாட்டை பொறுத்தவரை இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும்,  காற்றாலை மின் உற்பத்தியின் நிலையற்ற தன்மையாலும் மத்திய மின் உற்பத்தி  நிலையங்களில் அவ்வப்போது ஏற்பட்ட பழுது காரணமாகவும் மின் உற்பத்தி குறையும்  நேரத்தில், இந்திய மின் கட்டமைப்பு 2010 விதிகளின்படி மின்கட்டமைப்பின்  பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியுள்ளது. எனவே வடமாநிலங்களில் ஏற்பட்ட  மிகப்பெரிய அளவிலான மின்தடை போல் தமிழகத்தில் ஏற்படாமலிருக்கும் வகையில்  பொதுமக்களின் நலன் கருதியும் கட்டமைப்பின் பாதுகாப்பு கருதியும் அதன்  அதிர்வெண்ணை அதன் இயக்க எல்லைக்குள் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம்  முறையாக பராமரித்து வருகிறது என்பதால் வடமாநிலம் போன்று இங்குமின்தடை ஏற்பட  வாய்ப்பில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.