

ராமநாதபுரம்: துபாயில் அமெரிக்க கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டினால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினருக்கு, அமெரிக்க கடற்படை சார்பில் இழப்பீடு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம்,துபாய் கடல் பகுதியில் அமெரிக்க கடற் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சேகர் பலியானார். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முத்து முனியராஜ், மோர்பண்ணையைச் சேர்ந்த பண்டுவநாதன், முத்துக்கண்ணன் ஆகியோர் காயமடைந்தனர்.
சேகரின் உடல் ஜூலை 21 ம் தேதி சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.காயமடைந்தவர்கள் துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு சேகரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 மும் நிதியுதவியாக அறிவித்தது. அதன்படி, கைத்தறித் துறை அமைச்சர் சுந்தரராஜ் இத்தொகைகளை உரியவர்களின் குடும்பத்திடம் வழங்கினார்.
அப்போது, இந்த தாக்குதல் சம்பவத்துக்குக் காரணமான அமெரிக்க கடற்படையினரிடம் இருந்து இழப்பீடு பெற்றுத் தருமாறு குடும்பத்தினர் வலியுறுத்தினர்.
##~~## |