Published:Updated:

டெசோ:மத்திய அரசை விமர்சித்ததால் நிறுத்தப்பட்ட விக்கிரமபாகு உரை!

டெசோ:மத்திய அரசை விமர்சித்ததால் நிறுத்தப்பட்ட விக்கிரமபாகு உரை!
டெசோ:மத்திய அரசை விமர்சித்ததால் நிறுத்தப்பட்ட விக்கிரமபாகு உரை!
டெசோ:மத்திய அரசை விமர்சித்ததால் நிறுத்தப்பட்ட விக்கிரமபாகு உரை!

சென்னை: இலங்கை இனப்படுகொலைக்கு இந்திய அரசும் உடந்தை என்று டெசோ  மாநாட்டில் பேசிய இலங்கையை சேர்ந்த நவ சமசமாஜக் கட்சியின் தலைவர்  விக்கிரமபாகுவின் உரை பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

நேற்று சென்னை ஒய்.எம.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற டெசோ மாநாட்டில்  கலந்துகொண்டு உரையாற்றிய விக்கிரமபாகு,"ஈழத் தமிழர்கள் ஒரு தேசிய இனம்,  வடக்கு கிழக்கு அவர்கள் தாயகம், ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு,  இறுதிப் போர் என்று சொல்லி நடத்தப்பட்டது ஒரு இனப்படுகொலை இதற்கு இந்திய  நடுவண் அரசும் உடந்தை" என்று குற்றம்சாட்டினார்.
 

##~~##
மத்திய அரசுக்கு எதிராக அவர் இவ்வாறு பேசியதும்,அவரது உரை, அவர்  பேசிக்கொண்டிருக்கும் போதே இடையில் தடுத்து நிறுத்தப்பட்டது.இதனால் மாநாட்டு  அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசு ஏற்கனவே சில நிபந்தனைகளை இந்த மாநாட்டிற்கு விதித்திருந்த  நிலையில், விக்கிரமபாகுவின் பேச்சு மத்திய அரசை கோபப்படுத்திவிடும் என்பதாலேயே  அவரது உரை அவசர அவசரமாக நிறுத்தப்பட்டதாக தெர்கிறது.