Published:Updated:

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் சரத் யாதவ்... நிதிஷ் குமாருக்கு செக்!

பீகார் மாநில அரசியலில் பரபரப்பான சூழல் நிலவிவரும் நிலையில், மாநில முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ், டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சியை நடத்துகிறார்.

இந்த நிகழ்ச்சி, 'இந்தியாவின் பன்முக கலாசாரத்தைக் காப்பதற்காக' என்று சரத் யாதவ் தரப்பு கூறியுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் ஏற்பட்ட சச்சரவு காரணமாக, லாலு பிரசாத்தை எதிர்த்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார். இதையடுத்து, 24 மணி நேரத்திலேயே பா.ஜ.க-வின் ஆதரவோடு மீண்டும் ஆட்சி அரியணையில் ஏறினார் நிதிஷ். பா.ஜ.க-வுடன் நிதிஷ் கூட்டு வைத்துக் கொண்டது அவரின் கட்சிக்குள்ளேயே பலருக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக, அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சரத் யாதவ், நிதிஷின் செயலை மிகவும் கண்டித்தார். இதையடுத்து, ஐக்கிய ஜனதா தளம் பிளவுபடும் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில்தான், சரத் யாதவ் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சியை டெல்லியில் இன்று நடத்துகிறார். இதுகுறித்து அவர், 'நமது நாடு பன்மைத்துவ கலாசாரத்தை அடிப்படையாகக்கொண்டு அமைந்தது. அது காப்பாற்றப்பட வேண்டும். அதற்காகவே இந்த ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சி. இதில், நாட்டின் 17 எதிர்க்கட்சிகள் கலந்துகொள்வர்' என்று தெரிவித்துள்ளார்.