Published:Updated:

பிரபாகரன் பற்றி தவறாக பேசவில்லை: என்கேகேபி. ராஜா, வி.பி.ராஜன் விளக்கம்

சென்னை: பிரபாகரன் பற்றி தவறாக பேசவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதியிடம் தி.மு.க. செயலாளர் என்.கே.கே.பி.ராஜாவும், தலைமை கழக பேச்சாளர் வி.பி.ராஜனும் விளக்கம் அளித்துள்ளனர்

ஈழத்தமிழர்களை கொன்றவர் பிரபாகரன் என்று ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.கே.கே.பி.ராஜாவும், தலைமை கழக பேச்சாளர் வி.பி.ராஜனும் பொதுக் கூட்டத்தில் பேசியதாக தகவல் வெளியானது. இந்த கருத்து தி.மு.க.வுக்கு உடன்பாடானது இல்லை என்று தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்தது.

மேலும் இது தொடர்பாக விளக்கம் கேட்டு இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து என்.கே.கே.பி.ராஜாவும், வி.பி.ராஜனும் நேற்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தனர். விளக்க கடிதமும் கொடுத்தனர். அந்த கடிதத்தில், சகோதர யுத்தம் தொடர்பாகவே பேசினோம். பிரபாகரன் பற்றி தவறாக எதுவும் பேசவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

விளக்கத்தை பெற்றுக் கொண்ட கருணாநிதி ஈழப் பிரச்சினை தொடர்பாக தலைமை கழகத்தின் கருத்தை மீறி எதுவும் பேசக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.