Published:Updated:

`எந்த உடையை அணிய வேண்டும் என தந்தையின் அனுமதி தேவையில்லை!' - அமீர்கான் மகளின் பிறந்தநாள் உடை சர்ச்சை

அமீர்கான் மகள் ஈராகான்

``ஈராவின் உடையைப் பற்றிப் பேசும் அனைவரும் அமீர்கான் இதற்கு முன்பு பேசியது, செய்தது, செய்யாதது என அனைத்தோடும் அதை சம்பந்தப் படுத்திப் பேசுகிறீர்கள். அனைவரும் ஒன்றை நினைவில்கொள்ள வேண்டும். ஈரா 25 வயதான இளம்பெண். சுதந்திரமாக சிந்திக்க அவருக்கு முழு உரிமை உண்டு.''

`எந்த உடையை அணிய வேண்டும் என தந்தையின் அனுமதி தேவையில்லை!' - அமீர்கான் மகளின் பிறந்தநாள் உடை சர்ச்சை

``ஈராவின் உடையைப் பற்றிப் பேசும் அனைவரும் அமீர்கான் இதற்கு முன்பு பேசியது, செய்தது, செய்யாதது என அனைத்தோடும் அதை சம்பந்தப் படுத்திப் பேசுகிறீர்கள். அனைவரும் ஒன்றை நினைவில்கொள்ள வேண்டும். ஈரா 25 வயதான இளம்பெண். சுதந்திரமாக சிந்திக்க அவருக்கு முழு உரிமை உண்டு.''

Published:Updated:
அமீர்கான் மகள் ஈராகான்

பாலிவுட் நடிகரான அமீர்கானின் மகள் ஈராகான் சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். இவருடைய 25-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. அந்தப் புகைப்படங்களில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஈராவுடன் தந்தை அமீர்கான் மற்றும் தாய் ரீனா தத்தா ஆகியோர் இருந்தனர்.

அமீர்கான்
அமீர்கான்

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஈரா கான் அணிந்திருந்த உடை, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீச்சல் குளத்தின் அருகில் நிகழ்ந்த பிறந்தநாள் விழாவில் ஈரா நீச்சல் உடை அணிந்து கேக் வெட்டியுள்ளார். இதற்கு சமூக வலைதளத்தில் சிலர் எதிர் கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு ஏற்ற உடையா என்றும், தந்தையின் முன் இப்படி ஆடை அணியலாமா எனவும் அவரைத் திட்டி கருத்துகளைப் பதிவிட்டனர். இதைத் தொடர்ந்து ஈராகானுக்கு ஆதரவாக பாடகர் சோனா மோஹபத்ரா குரல் எழுப்பியுள்ளார்.

Birthday celebration
Birthday celebration
Photo by Ibrahim Boran from Pexels

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ள சோனா மோஹபத்ரா, `ஈராவின் உடையைப் பற்றிப் பேசும் அனைவரும் அமீர்கான் இதற்கு முன்பு பேசியது, செய்தது, செய்யாதது என அனைத்தோடும் அதை சம்பந்தப்படுத்தி பேசுகிறீர்கள்.

அனைவரும் ஒன்றை நினைவில் வைக்க வேண்டும். ஈரா 25 வயதான இளம்பெண். சுதந்திரமாக சிந்திக்க அவருக்கு முழு உரிமை உண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர் எதை அணிய வேண்டும், அணிய வேண்டாம் என்பது அவரின் விருப்பம். அதற்கு அவர் தந்தையின் அனுமதியோ, உங்கள் அனுமதியோ தேவையில்லை" எனப் பதிவிட்டு `ஆணாதிக்கம்' என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி இருந்தார். இவரின் கருத்தை வரவேற்றும், ஈராவுக்கு ஆதரவாகவும் மேலும் சிலர் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டனர்.

அமீர்கான்
அமீர்கான்

ஒரு இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர், `நான் தங்களுடைய கருத்துகளையும் சுதந்திரத்தையும் மதிக்கிறேன். இந்த விஷயம் குறித்த உங்களுடைய நேரடி கருத்துக்குப் பாராட்டுகள்' எனக் கூறியுள்ளார். மற்றொருவர், `நீச்சல் குளத்துக்கு அருகில் நடக்கும் விழாவுக்கு இந்த உடை ஏற்றதாகவே தோன்றுகிறது. அனைவரும் அவரவர் விருப்பத்தின்படி உடை அணிந்துள்ளனர்' எனப் பதிவிட்டிருந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism