Published:Updated:

சமந்தா முதல் சாய்னா வரை - சர்ச்சைகளின் நாயகன் சித்தார்த் இனியாவது ட்வீட்டும் முன் யோசிப்பாரா?

சமந்தா முதல் சாய்னா வரை - சர்ச்சைகளின் நாயகன் சித்தார்த்
News
சமந்தா முதல் சாய்னா வரை - சர்ச்சைகளின் நாயகன் சித்தார்த்

சாய்னா மட்டுமல்ல ஏற்கெனவே சித்தார்த் தனது முன்னாள் காதலியான நடிகை சமந்தாவை மறைமுகமாகக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டிருந்ததும் முன்னர் சர்ச்சையானது.

சித்தார்த் என்றாலே ஒன்று ஆக்டிங், இன்னொன்று ட்வீட்டிங் என்றுதான் சொல்லவேண்டும்! அந்தளவுக்கு நடிப்பில் காட்டும் ஆர்வத்தை ட்விட்டரில் ட்வீட் செய்வதிலும் காட்டுவார். இவர் ட்வீட் செய்து சர்ச்சைகளான அரசியல் பதிவுகள் ஏராளம். மத்திய அரசின் திட்டங்களை விமர்சிப்பது, மோடி-பாஜக அரசை விமர்சிப்பது என பெரும்பாலும் அரசியல் சார்ந்த பதிவுகளில் சர்ச்சை நாயகனாக வலம்வந்துகொண்டிருந்த சித்தார்த் தற்போது ஆபாசம் சார்ந்த பதிவில் சிக்கி கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார்.

நடிகர் சித்தார்த்
நடிகர் சித்தார்த்

சர்ச்சையின் தொடக்கம்:

கடந்த ஜனவரி 5-ம் தேதி, பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் நடைபெறவிருந்த பிரமாண்டப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றுகொண்டிருந்த பிரதமர் மோடியின் கார் செல்லும் பாதையை வழிமறித்து, பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நிகழ்ச்சியில் கலந்துகொள்ளமுடியாமல் பாதிவழியிலேயே டெல்லி திரும்பினார் மோடி. இந்த சம்பவத்திற்கு முழுக்காரணம் பஞ்சாப் காங்கிரஸ் அரசின் பாதுகாப்பு குறைபாடுதான் என மத்திய அரசு குற்றம்சாட்ட, அதை மறுத்த பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, ஹெலிகாப்டர் மூலம் செல்லவிருந்த மோடியின் பயணம் கடைசி நேரத்தில் கார் வழியாக செல்ல தீர்மானித்ததுதான் காரணம் எனவும் மோடி நாடக அரசியல் செய்கிறார் என பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொண்டனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
சாய்னா நேவால்
சாய்னா நேவால்

இந்த நிலையில், திரைப்பட நடிகரான சித்தார்த், தனது ட்விட்டரில் சாய்னாவின் பதிவை குறிப்பிட்டு, அதை இரட்டை அர்த்தத்தில் (ஆபாசமாக) கேலி செய்யும் விதமாக ரீட்வீட் செய்தார். சித்தார்த்தின் இந்தப் பதிவு வைரலாகி பெரும் சர்ச்சையைக் ஏற்படுத்தியிருக்கிறது. சித்தார்த்துக்கு எதிராக பெண்கள், சமூக செயற்பாட்டாளர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கடுமையான கண்டனக்குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

சித்தார்த்
சித்தார்த்

சித்தார்த் பதிவுக்கு குவிந்த கண்டனம்:

குறிப்பாக சாய்னா நேவாலின் தந்தை ஹர்விர் சிங் நேவால், ``என் மகளுக்கு எதிராக இது போன்ற வார்த்தைகளைப் படித்த பின் மிகவும் மோசமாக உணர்ந்தேன். என் மகள் பதக்கங்களை வென்றிருக்கிறார், இந்தியாவிற்கு விருதுகளை கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். சித்தார்த் நாட்டுக்கு என்ன செய்தார்?" என ஆதங்கத்துடன் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல, கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா, ``நாட்டுக்காக வியர்வையும் ரத்தமும் சிந்தி விளையாடும் ஒரு விளையாட்டு வீராங்கனைக்கு எதிரான இதுபோன்ற கொச்சை வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு விளையாட்டு வீரனாக சாய்னா நேவாலுக்கு நான் ஆதரவளிக்கிறேன். அருவருப்பான வார்த்தை பயன்பாட்டை கண்டிக்கிறேன்" என தனது ட்விட்டரில் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதேபோல ஜக்கி வாசுதேவ், பாடகி சின்மயி, நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் சித்தார்த்தின் பதிவுக்கு எதிராக கருத்துதெரிவித்திருக்கின்றனர்.

சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா
Twitter

சித்தார்த் - சாய்னா பதில்:

இந்த குற்றசாட்டுகள், விமர்சங்களுக்கு பதிலளிக்கும் விதமாக ட்வீட் செய்த சித்தார்த், `தனது வார்த்தை தவறாகப் பொருள்கொள்ளப்பட்டுவிட்டது எனவும், தவறான நோக்கத்தில் அவமரியாதை செய்யும் வகையில் தான் கருத்துப் பதிவிடவில்லை' எனவும் விளக்கமளித்திருக்கிறார்.

`சாய்னா நேவால்’
`சாய்னா நேவால்’

சர்ச்சையான இந்த விவகாரம் குறித்துப் பேசிய சாய்னா, ``சித்தார்த் என்ன சொன்னார் என்று எனக்குத்தெரியவில்லை. நான் அவரை ஒரு நடிகராக விரும்பினேன். ஆனால் அவர் இப்படி செய்வது நன்றாக இல்லை. அவர் தனது கருத்தை சிறந்த வார்த்தைகளை கொண்டு வெளிப்படுத்தியிருக்கலாம். இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஒரு பிரச்னை என்றால், நாட்டில் எதுபாதுகாப்பானது என்று எனக்குத் தெரியவில்லை" என வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்:

சித்தார்த்தின் பதிவு பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக இருக்கிறது எனவே, அவர்மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநில டிஜிபிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். மேலும் அவர் சித்தார்த்துக்கு அனுப்பிய நோட்டீஸில், ``உங்களின் கருத்து பெண்களையும், பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கில் உள்ளது. ஒரு பெண்ணுக்கு எதிரான இத்தகைய மோசமான, பொருத்தமற்ற கருத்தை மகளிர் ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது. ஆகவே, தானாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா
தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா

இதற்கு முன் சமந்தா?

சாய்னா மட்டுமல்ல ஏற்கெனவே தனது முன்னாள் காதலியான நடிகை சமந்தாவை மறைமுகமாகக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டிருந்ததும் முன்னர் சர்ச்சையானது. சித்தார்த் உடனான காதல் முறிவுக்குப் பின்னர் நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். பின்னர் குறுகியகாலத்திலேயே இருவருக்கும் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு கடந்த ஆண்டு அக்டோபரில் தங்களின் விவாகரத்தை அறிவித்தனர். சமந்தா இதுகுறித்து உருக்கமானப் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

சமந்தா - நாக சைதன்யா
சமந்தா - நாக சைதன்யா

அந்த நிலையில் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ``பள்ளியில் நான் ஆசிரியரிடம் கற்றுக்கொண்ட முதல் பாடம், ஏமாற்றுகிறவர்கள் வெற்றிபெறுவதில்லை! நீங்கள் கற்றுக்கொண்டது எது?" என பதிவிட்டிருந்தார். அப்போதே, சித்தார்த் இந்தப் பதிவின்மூலம் சமந்தாவை மறைமுகமாக தாக்கியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சித்தார்த், ``யாரையும் மனதில் வைத்து அந்த ட்வீட் போடவில்லை. என்னுடைய ட்வீட் தனிப்பட்ட யாரையும் குறிப்பிடவில்லை. பல வருடங்களுக்கு முன் என் ஆசிரியர் ஒருவர் சொல்லித் தந்ததை வைத்து அதனைப் போட்டேன். யாருடைய பெயரையும் தேவையில்லாமல் இழுக்காதீர்கள். சமூக வலைத்தளத்தில் வரும் யூகங்களுக்கு நான் பொறுப்பல்ல!" என்று பதிலளித்திருந்தார்.

தொடர்ச்சியாக சர்ச்சைப் பதிவுகளின் மூலம் பிரச்னையில் சிக்கிக்கொள்ளும் சித்தார்த் இனிமேலாவது, யோசித்து ட்வீட் செய்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.