Published:Updated:

ஏலியன்கள் வெறும் கட்டுக்கதையா, பிரபஞ்சத்தில் நாம் தனியாகத்தான் இருக்கிறோமா? மர்மங்களின் கதை -பகுதி 3

மர்மங்களின் கதை

மேற்கத்திய உலகின் வானம் கடந்த நூறு வருஷங்களில் கொரினா பார்த்த பறக்கும்தட்டைப் போன்ற பல வடிவங்களை பார்த்திருக்கிறது. வழக்கமான விமானம், ராக்கெட் போன்ற வடிவங்கள் இல்லாமல் பல வடிவங்கள் வானில் தெரிந்திருக்கின்றன.

ஏலியன்கள் வெறும் கட்டுக்கதையா, பிரபஞ்சத்தில் நாம் தனியாகத்தான் இருக்கிறோமா? மர்மங்களின் கதை -பகுதி 3

மேற்கத்திய உலகின் வானம் கடந்த நூறு வருஷங்களில் கொரினா பார்த்த பறக்கும்தட்டைப் போன்ற பல வடிவங்களை பார்த்திருக்கிறது. வழக்கமான விமானம், ராக்கெட் போன்ற வடிவங்கள் இல்லாமல் பல வடிவங்கள் வானில் தெரிந்திருக்கின்றன.

Published:Updated:
மர்மங்களின் கதை

- ஆர்.எஸ்.ஜெ

17 ஜூலை, 1991

கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆல்டெர்க்ரோவ் என்ற டவுன். பொழுது சாயும் நேரம். இயந்திர வாழ்க்கையை முடித்துக்கொண்டு, வீடு திரும்பிய மக்கள் இளைப்பாறத் தொடங்கியிருந்தனர். பகலும் ஓய்வுபெற்று, வானம் கருமை பூசிக்கொண்டிருந்தது.

ஆல்டெர்க்ரோவ் டவுனுக்குப் புதிதாகக் குடிவந்திருந்த கொரினா சேபல்ஸ் இரவு உணவு முடித்து, தன் குழந்தைகளைத் தூங்க வைத்திருந்தார். திருமணச் சேதி சொல்லவரும் காதலனுக்காகக் காத்திருந்தார். கணவர் இல்லாமல் குழந்தைகளை வளர்த்துவந்த கொரினாவுக்கு முக்கிய திருப்பத்தை கொடுக்கப்போகும் இரவாக அந்த இரவு இருந்ததில் வியப்பில்லை. ஆனால், அன்று நேர்ந்த திருப்பம், கொரினா விரும்பிய திருப்பமாக இருக்கவில்லை.

மர்மங்களின் கதை
மர்மங்களின் கதை

வீட்டுக்குப் பின்னால் காதலருடன் அமர்ந்து தேநீர் குடித்துக்கொண்டிருந்தார் கொரினா. தான் விரும்பியிருக்கும் சேதியை காதலன் சொல்லக் காத்திருந்தார். திடுமென ஓர் அதிர்வு. கொரினா தடுமாறினார். வயிற்றுக்குள் குலை நடுக்க உணர்வு. என்ன நடக்கிறதெனத் தெரியவில்லை.

மீண்டும் அதிர்வை உணர்ந்தார். காதலனும்கூட அதிர்வை உணர்ந்திருந்தார். மெல்ல அதிர்வு பரவி அதிகமானது. இருவருக்கும் அச்சம் தொற்றியது. பதறத் தொடங்கினர். அமர்ந்திருந்த நாற்காலிகளைவிட்டு எழுந்தனர்.

‘என்ன ஃபீல் பண்ணீங்க..?’

‘ஓ... என்னமோ ஆகுது?’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தன்னிச்சையாக மேலே இருவரும் பார்த்தபோது, அவர்கள் கண்களுக்குத் தெரிந்த காட்சி நம்ப முடியாததாக இருந்தது. ஒரு பெரும் நிழல் இருவரின் மேலும் படர்ந்தது. இரவு வானத்தின் நட்சத்திரங்களை மறைத்து ஒரு பெரும் தட்டு நகர்ந்துகொண்டிருந்தது.

சில நிமிடங்களுக்குத் தன்னை மறந்து நின்றார் கொரினா. வானம் மீண்டும் நட்சத்திரம்கொள்கிறது. தட்டு நகர்ந்து சென்று இருட்டுக்குள் மறைந்துவிடுகிறது.

வீட்டுக்குள்ளிருந்து வருகிறார் காதலர். கொரினாவை அப்போதுதான் சந்திப்பதைப்போலப் பேசுகிறார்.

மர்மங்களின் கதை
மர்மங்களின் கதை

தேநீர் எடுத்து வருவதற்குள் கொரினா காணாமல் போய்விட்டதாகச் சொல்கிறார் காதலர். இரண்டு நிமிடங்கள்தான் ஆகிறதெனச் சொல்லும் கொரினாவிடம் நேரத்தைப் பார்க்கச் சொல்கிறார் காதலர். 45 நிமிடங்கள் கடந்திருக்கின்றன.

கொரினாவுக்கு நேர்ந்தது என்ன... 45 நிமிடங்கள் அவர் எங்கே சென்றிருந்தார்... வானத்தில் அவர் பார்த்த பொருள் என்ன?

எல்லாக் கேள்விகளும் மனிதகுலம் அதிகமாக விவாதித்துவந்த ஒரு விஷயத்தை நோக்கியே திரும்பின.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏலியன்கள்!

`ஏலியன்கள்’ என்றழைக்கப்படும் அந்நிய கிரக ஜீவராசிகள்!

மேற்கத்திய உலகின் வானம் கடந்த நூறு வருஷங்களில் கொரினா பார்த்த பறக்கும்தட்டைப் போன்ற பல வடிவங்களைப் பார்த்திருக்கிறது. வழக்கமான விமானம், ராக்கெட் போன்ற வடிவங்கள் இல்லாமல் பல வடிவங்கள் வானில் தெரிந்திருக்கின்றன. அடையாளம் காண முடியாத இத்தகைய வடிவங்களுக்கு அறிவியல் உலகம் சூட்டியிருக்கும் பெயர் UFO. Unidentified Flying Objects. அடையாளம் கண்டிட முடியாத பறக்கும் பொருள்கள்!

UFO-க்களில் வருவது யார்? பூமியிலுள்ள நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவி மறையுமளவுக்கு உயர் தொழில்நுட்பமும் அறிவும்கொண்டவர்கள் யாராக இருப்பார்கள்?

நிச்சயமாக பூமிவாசிகளாக இருக்க மாட்டார்கள் என்பதே மனிதகுலத்தின் அவதானிப்பு.

பூமி இருக்கும் சூரிய மண்டலத்தில் மட்டுமே எட்டு கிரகங்கள் இருக்கின்றன. வியாழன் கிரகம் உள்ளிட்ட எல்லா சூரிய மண்டல கிரகங்களையும், விண்கலங்கள் மற்றும் பிற விஞ்ஞான சூத்திர நுட்பங்கள் வழியாக ஆராய்ந்து, வேறு ஜீவராசிகள் ஏதும் நமக்கு அருகில் இல்லை என விஞ்ஞானம் கண்டறிந்துவிட்டது. ஆனாலும் சூரிய மண்டலத்தைப் போன்ற மண்டலம் ஒன்று மட்டுமே இந்தப் பிரபஞ்சத்தில் கிடையாது. சூரியனைப் போன்ற பல்லாயிரம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன. அந்த நட்சத்திரங்களைச் சுற்றி கிரகங்களும் பிற விண்வெளிப் படலங்களும் இருக்கின்றன. அவை எவற்றிலும் மனிதனைப் போன்ற ஜீவராசிகள் இல்லை என்பதை அறிவியலால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. ஏனெனில், மனிதகுலத்தின் அறிவும் தொழில்நுட்பமும் மொத்த பிரபஞ்சத்தை அளக்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. அந்த உண்மையில் இருந்துதான் `அளவிட முடியாத இந்தப் பெரும் பிரபஞ்சத்தில் நாம் தனியாக இருக்கிறோமா?’ என்ற கேள்வி தொடங்குகிறது.

தான் வாழும் பூமியையும் அதைச் சுற்றியிருக்கும் கோள்களையுமே சில நூறு ஆண்டுகளாகத்தான் கண்டறிந்திருக்கும் மனித அறிவுக்குப் புரிபடாத உயரத்தில் இன்னும் சில கேள்விகளும் இருக்கின்றன.

பெரு நாட்டில் இருக்கும் Nazca கோடுகள் அந்தக் கேள்விகளில் ஒன்று.

நாஸ்கா கோடுகள்

சுமாராக 80 கிலோமீட்டர் தொலைவுக்கு வெவ்வேறு வடிவங்களில் இருக்கும் கோடுகளே, நாஸ்கா கோடுகள்! பறவை, குரங்கு போன்ற உயிரினங்களின் தோற்றங்களைக் கொண்டிருக்கும் இந்த நாஸ்கா கோடுகளும் சில ஆயிரம் வருடங்களுக்கு முன் உண்டாக்கப்பட்டவை. ஆனால் என்ன காரணத்துக்காக உருவாக்கப்பட்டன என்பதற்கான பதிவுகள் ஏதும் இல்லை. குரங்கு, பறவை போன்ற வடிவங்கள் வானிலுள்ள நட்சத்திரக் கூட்டங்களை குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆனால், வானிலிருந்து பார்த்தால் துலக்கமாகத் தெரியும் அளவுக்கு இத்தனை பெரிய கோடுகள் வரையப்பட்டது யாருக்காக... யார் வரைந்திருப்பார்கள்?

Nazca கோடுகள்
Nazca கோடுகள்
Credits: Live Science

அடுத்த கேள்வி நாம் அனைவரும் ரசித்துப் பார்க்கும் பிரமிடுகளைப் பற்றியது. 4,500 வருடங்களுக்கு முன் எகிப்திய ராஜாக்களான பெரோக்களின் இறந்த உடல்களைப் பாதுகாக்க கட்டப்பட்டவையே பிரமிடுகள். பெரோக்களின் உடல்களைப் பாதுகாப்பதன் வழியாக அவர்களின் ஆன்மாக்களைப் பிற உலகங்களுக்குக் கடத்தும் முயற்சியாகவும் பிரமிடுகள் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. விண்வெளிப் பார்வைக்கு தெளிவாகத் தெரியும் குறியீடுகளாக பிரமிடுகளின் வடிவமைப்புக்குக் காரணம் என்ன... இத்தனை பெரிய கற்களையும் சரியான கோணங்களில் அடுக்கி, அவற்றுக்குள் அறைகளையும் அமைக்கும் அளவுக்கான விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் 4,500 வருடங்களுக்கு முந்தைய நாகரிகத்துக்கு எப்படிச் சாத்தியப்பட்டிருக்கும்?

அறிவிலும் தொழில்நுட்பத்திலும் மனிதகுலம் உச்சம் தொட்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில்கூடச் சாத்தியப்படாத கட்டமைப்புகளும் விஞ்ஞானமும் பல்லாயிரம் வருடங்களுக்கு முன் சாத்தியப்பட்டிருப்பதற்குக் காரணம் ஒன்றே ஒன்றாக இருக்க முடியுமெனக் கருதப்படுகிறது. இவை யாவும் மனித அறிவிலிருந்து உதித்த விஞ்ஞானமோ கட்டமைப்போ இல்லை என்பதே அந்தக் காரணம்.

மர்மங்களின் கதை
மர்மங்களின் கதை

ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி, ஆற்றங்கரைகளில் தங்கி நாகரிகத்தின் ஆரம்பகாலங்களை மனிதன் அடைந்தபோது அவனுக்கான அறிவியல்ரீதியான உதவிகள் பூமியிலிருந்து கிடைத்திருக்காது என நம்பப்படுகிறது. பூமியைப்போல் உயிர் வாழும் சூழல்கொண்ட, இந்தப் பிரபஞ்சத்தின் ஏதோவொரு மூலையிலிருக்கும் ஒரு கோளிலிருந்து வந்த ஜீவராசிகள் உதவியிருக்கலாம். மனிதகுலம் தோன்றுவதற்கு முன்னமே பூமிக்கு அந்நிய ஜீவராசிகள் வந்து செல்லும் வழக்கம் இருந்திருக்கலாம். பூமியில் உருவான உயிர், மனிதப் பரிணாமம் அடைந்து நாகரிகம் எட்ட அவர்கள் உதவியிருக்கலாம்.

உலகப்புகழ் பெற்ற வானியல் அறிவியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங்கூட, அந்நிய கிரக ஜீவராசிகள் ஏதேனும் சேதிகளை பூமிக்கு அனுப்புகின்றனவா என ஆராய `Breakthrough Listen’ என்ற திட்டத்தைப் பெரும் பொருட்செலவில் தன் இறப்புக்கு முன் அறிவித்திருந்தார். இவை எல்லாவற்றையும் தாண்டி அமெரிக்க அரசு ரகசியமாக ஏலியன்களை வரவழைத்து `ஏரியா 51’ என்னும் ராணுவ தளத்தில் ஆய்வு செய்வதாகவும் ஒரு பேச்சு உண்டு. பலர் ஏலியன்களால் கடத்தப்பட்டு திரும்ப வந்ததாகவும் புகாரளித்திருக்கின்றனர். பலர், ஏலியன்களுடன் செல்லவிருப்பதாகவும் சொல்லிச் சென்று மறைந்திருக்கின்றனர்.

மனிதனின் முதல் முக்கியத் தொழில்நுட்பமான நெருப்பைப் பயன்படுத்தும் வழிகளை அவன் அடைந்தது 16 லட்சம் வருடங்களுக்கு முன்புதான். குரங்கிலிருந்து இன்று நாம் பார்க்கும் மனிதனாக முழு வடிவம் அவன் பெற்றது இரண்டு லட்சம் வருடங்களுக்கு முன்னால். கல் ஆயுதங்களை ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்புதான் பயன்படுத்தத் தொடங்குகிறான். விவசாயத்தையே மனிதன் கற்றறிந்தது சுமார் 6,000 வருடங்களுக்கு முன்புதான். ஐரோப்பியர்கள் தங்கள் நாடுகளை விடுத்து பூமியின் பிற பிரதேசங்களை நோக்கி நகரத் தொடங்கியது 15-ம் நூற்றாண்டில். 18-ம் நூற்றாண்டில்தான் ஐரோப்பாவில் தொழிற்புரட்சிக்கான ஆரம்ப விதை போடப்பட்டது.

ஏலியன் சிக்னல்களும், தொடர் குழப்பங்களும்!
ஏலியன் சிக்னல்களும், தொடர் குழப்பங்களும்!

ஐரோப்பியர்களின் தொழில்நுட்பம் மிகவும் சமீபமானது. அவர்களுக்கு முன்னமே, சிந்து சமவெளி போன்ற ஆற்றங்கரைகளில் பிற மனிதக் கூட்டங்கள் நகரத்தையே கட்டக்கூடிய அளவுக்கான தொழில்நுட்பத்தை எட்டியிருந்தன. பல்லாயிரம் அடிமை மக்களின் ரத்தங்களை உறிஞ்சி மிகப்பெரும் கோட்டைகளையும் கட்டடங்களையும் பேரரசுகள் கட்டியெழுப்பியிருந்தன. அறிவில் உயர்ந்தவர்களாகத் தங்களை கருதிக்கொள்ளும் ஐரோப்பியர்களுக்கு பிற இனங்களின் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் புரியவில்லை. அவர்களுக்கு அத்தகைய அறிவு இருந்தது என்பதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. விளைவு, பிரமிடுகளை ஏலியன்கள் கட்டியதாக நம்பத் தொடங்கினார்கள்.

பறக்கும்தட்டு, ஏலியன் பற்றிய கதைகள் யாவும் கற்பனைகள், கட்டுக்கதைகள் என நமக்குப் புரியும் நேரத்தில் எஞ்சி நிற்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். `இத்தனை பெரிய பிரபஞ்சத்தில் நாம் தனியாகத்தான் இருக்கிறோமா?’

உண்மையில் பூமிக்கு அந்நியமான ஜீவராசி, மனிதன்தான். உயிரை உருவாக்கிய இயற்கையிடமிருந்து ஒவ்வொரு நாளும் தன்னை அந்நியப்படுத்திக்கொண்டே இருக்கிறான். தன் பேராசைக்காக இயற்கையை அழித்து, பூமியின் உயிர் வாழ்க்கைச் சூழலை இல்லாமல் ஆக்கிக்கொண்டிருக்கிறான். மேலும் மேலும் தனிமை ஆவதில் பயமும் குழப்பமும் கொண்டு ஏதோவொரு நம்பிக்கைக் கரம் வானில் தோன்றி தன்னைக் காப்பாற்றிவிடாதா என ஏங்குகிறான்.

பிற உயிர்களை அழித்து, பூமியையும் அழித்து, அடுத்து தான் வாழ செவ்வாய் கிரகத்தில் காலனிகள் கட்டத் தொடங்கியிருக்கிறான். ஒருவேளை மனிதனைத் தொடர்புகொள்ளும் வேற்றுக்கிரக ஜீவராசி என ஒன்று இருந்தால் அது மனிதனாகத்தான் இருக்கும். அவன் பூமியில் இல்லாத வேறு கிரகத்திலிருந்து தொடர்புகொள்வான். நம் எதிர்காலத்திலிருந்து நமக்குச் சேதி அனுப்புவான். அந்தச் சேதியைக் கேட்கும் வரையாவது நாம் அழியாமல் நம்மை காப்பாற்றிக்கொள்வோமா என்பதுதான் கேள்வி!

அமெரிக்கா ரகசியமாக ஏலியன்களை ஆராய்வதாகச் சொல்லப்படும் `ஏரியா 51’ என்ற பகுதியைப் பற்றியும் ஹாலிவுட் திரைப்படங்களும் புனைகதைகளும் பல பேசியிருக்கின்றன. ஆனால், உண்மையில் ஏரியா 51 என்பது அமெரிக்காவின் நெவேடா பாலைவனத்தில் இருக்கும் ஒரு ராணுவ தளம் மட்டும்தான். சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான பனிப்போர் உச்சத்தில் இருந்த காலத்தில் அரசியல் போட்டியைத் தாண்டி, இரு நாடுகளின் போட்டியும் ஆயுதம், அறிவியல், தொழில்நுட்பம் என வெவ்வேறு களங்களுக்குச் சென்றன. சோவியத் யூனியன் மீது தாக்குதல் நடத்த வேண்டிய சூழல் வந்தால், சோவியத்துக்கு நிகரான ஆயுத மற்றும் போர் தொழில்நுட்பங்களில் தயாராக இருக்க வேண்டிய நிர்பந்தம் அமெரிக்காவுக்கு இருந்தது. நவீன விமானங்கள், ஆளில்லா விமானங்கள், புதுவகை ஏவுகணைகள், விண்வெளியில் இடம் பிடிப்பதற்கான விஞ்ஞானப் போட்டிகள் எனப் பலவகை ஆராய்ச்சிகளை அமெரிக்கா நடத்தத் தேர்ந்தெடுத்த இடம்தான் ஏரியா 51 ராணுவ தளம்.

மர்மங்களை ஆராய்வோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism