Published:Updated:

கொரோனா: 6 கி.மீ-க்கு ரூ.9,200; ஆக்ஸிஜனை அகற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்! - குழந்தைகளுக்கு நேர்ந்த அவலம்

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ் ( மாதிரிப் புகைப்படம் )

``நான் அவரிடம் என்னால் பணம் செலுத்த முடியாது என்றுகூறி கெஞ்சினேன். ஆனால், அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை" என்கிறார் குழந்தைகளின் தந்தை.

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் அதிகமாகப் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பாதிப்புகள் அதிகமாகி வருவதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. மக்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர். மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களும் மக்களிடம் அலட்சியமாகவும் பணம் செலுத்த முடியாத நிலையில் தரக்குறைவாக நடத்துவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களை பணம் செலுத்தாத காரணத்துக்காக வாகனத்தில் இருந்து இறங்க வற்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா கட்டணம்
கொரோனா கட்டணம்

கொல்கத்தாவில் இரண்டு சகோதரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்ததை அடுத்து அவர்களை மாநில மருத்துவமனைக்கு அழைத்து செல்ல குழந்தைகளின் தந்தை முடிவெடுத்து ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பார்க் சர்க்கஸ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இருந்து கொல்கத்தா மருத்துவனைக்கு அழைத்துச் செல்ல சுமார் ரூபாய் 9,200 கேட்டதாகக் குழந்தைகளின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். இரண்டு மருத்துவமனைக்கும் இடையிலான தொலைவு வெறும் ஆறு கி.மீதான் என்றும் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை
மருத்துவமனை
மாதிரிப்படம்

இதுதொடர்பாக குழந்தைகளின் தந்தை பேசும்போது, ``நான் அவரிடம் என்னால் பணம் செலுத்த முடியாது என்று கூறி கெஞ்சினேன். ஆனால், அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை. பதிலாக, என் இளைய மகனுக்கு அளிக்கப்பட்டு வந்த ஆக்ஸிஜனை அகற்றி எனது மகன்களையும் ஆம்புலன்ஸில் இருந்து கீழே இறக்கினார். தொடர்ந்து வாக்குவாதங்களுக்குப் பிறகு ரூபாய் 2,000 கட்டணத்துடன் அழைத்துச் செல்ல சம்மதித்தார்.

ஐ.சி.ஹெச் மருத்துவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களால்தான் கொல்கத்தா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக என் குழந்தைகளை அழைத்து செல்ல முடிந்தது” என்று தெரிவித்துள்ளார்.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கொரோனா நோயாளிகளிடம் நடந்துகொண்ட விதம் தற்போது பலரையும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.

கொரோனா: ஓயாமல் கேட்கும் ஆம்புலன்ஸ் சத்தம்! - நெல்லையில் அதிகரிக்கும் நோய்த் தொற்று 
அடுத்த கட்டுரைக்கு