இந்த வழக்கில் தேனி மருத்துவக் கல்லூரி நிர்வாகம்மீதும் சந்தேகம் வலுத்திருப்பதால், கல்லூரியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கிறது சி.பி.சி.ஐ.டி.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகைதுசெய்யப்பட்ட உதித் சூர்யாவின் குடும்பத்தினரை சென்னை சி.பி.சி.ஐ.டி தலைமையகத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், அவர்களை அங்கிருந்து தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் எழிலரசன் ஆகியோரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களிடம் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினார் டி.எஸ்.பி ஹார்ட்வின் ஜெகதீஸ்குமார். தேனி மருத்துவக் கல்லூரிக்குச் சென்ற போலீஸார், அங்கு உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து உதித் சூர்யா, அவரின் பெற்றோர்மீது மூன்று பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். “ஆள்மாறாட்டம் விவகாரம் அம்பலமானதும், உதித் சூர்யாவின் குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டனர். முதலில், ஹைதராபாத்தில் உள்ள வெங்கடேசனின் மருத்துவ நண்பர் மூலம், அங்குள்ள ஹோட்டலில் ரூம் போட்டுள்ளனர். நீட் விவகாரம் அந்த மருத்துவ நண்பருக்குத் தெரியவில்லை. பிறகு, பேருந்து மூலம் திருப்பதி சென்றனர். அங்கு சாமி கும்பிடுவதற்காக மலை ஏறுவதற்குள் கைதுசெய்துவிட்டோம். அவர் களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில், ‘எங்களுக்கும் நீட் தேர்வு எழுதியவருக்கும் தொடர்பு இல்லை. ஏஜென்ட் மூலம் 20 லட்சம் ரூபாய் கொடுத்தோம்’ என்றனர். விரைவில் முழு உண்மைகளும் வெளிவரும்” என்றார்கள்.
மாடர்னும் பேலியோவும்!
ஆள்மாறாட்டம் விவகாரத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆவணங்கள் மறுபரிசோதனை செய்யப்பட்டன. இதில் கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் ஒரு மாணவர், ஒரு மாணவி என இரண்டு பேரின் புகைப்படங்களில் பெரும்வித்தியாசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம், மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு கடிதம் அனுப்பியது. தொடர்ந்து இருவரையும் சென்னைக்கு அழைத்து விசாரித்தனர் அதிகாரிகள். இதில் மாணவியின் பெற்றோர் தரப்பில், ‘`எங்கள் மகள் இப்போது மாடர்ன் ஆகிவிட்டாள். அதுதான் வித்தியாசத்துக்குக் காரணம்’’ என்று விளக்கம் அளித்துள்ளனர். மாணவரின் பெற்றோர் தரப்பிலோ, ‘`எங்கள் மகன் பேலியோ டயட் இருந்ததால், அடையாளம் தெரியவில்லை’’ என்று விளக்கம் அளித்துள்ளனர்.