Published:Updated:

150 நாடுகளிலிருந்து நிதி... பின்னணி என்ன? நன்கொடை சர்ச்சைக்கு ஈஷா பதில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஈஷா ஜக்கி வாசுதேவ் மோட்டார் சைக்கிளில்  பயணம்
ஈஷா ஜக்கி வாசுதேவ் மோட்டார் சைக்கிளில் பயணம்

சட்டத்துக்குப் புறம்பாக ஈஷா மையம் நிதி திரட்டியதாக கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சமீபத்தில் , `காவிரி அழைக்கிறது' என்ற திட்டத்தின் பெயரில் ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தலைக்காவிரி முதல் திருவாரூர் வரை மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தார். ஜக்கி வாசுதேவ் சென்ற பாதையில் அதாவது, 639 கி.மீட்டர் தொலைவுக்கு கோடிக்கணக்கான மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஒரு மரம் நடுவதற்கு மக்கள் ரூ.42 நன்கொடை தரலாம் என்று ஈஷா மையம் அறிவித்திருந்தது. அதன்படி, ஏராளமானோர் நன்கொடை அளித்தனர். இந்தத் திட்டம் `டைட்டானிக்' கதாநாயகன் லியார்னாடோ டி காப்ரியோ வரை சென்று சேர்ந்தது.

காவிரிக்காக நன்கொடை அளிக்கும் முறை
காவிரிக்காக நன்கொடை அளிக்கும் முறை

ஜக்கி வாசுதேவின் இந்தத் திட்டத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அமர்நாத் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், `காவிரி அழைக்கிறது' என்ற பெயரில் ஜக்கி வாசுதேவ் வசூலித்த நன்கொடை விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். 253 கோடி மரங்கள் நடுவதற்கு ஈஷா மையம் திட்டமிட்டுள்ளது. மரம் ஒன்றுக்கு ரூ.42 வசூலிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், இத்தனை கோடி மரங்களுக்கு ரூ.10,626 கோடியை ஈஷா அமைப்பு திரட்டுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தனியார் அமைப்பை நன்கொடை வசூலிக்க அனுமதித்த அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்!
கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபே ஓகா

இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபே ஓகா, நீதிபதி ஹேமந்த் சந்திரகௌடர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "ஈஷா அமைப்பு திரட்டிய நன்கொடை விவரங்கள், நன்கொடை திரட்டிய முறை குறித்து உயர்நீதிமன்றத்துக்கு விவரங்களை அளிக்க வேண்டும். ஆன்மிகவாதிகள் என்றால் தங்களை சட்டத்துக்கு மேலானவராக கருதிக்கொள்ளக் கூடாது. ஆன்மிகவாதிகளும் சட்டத்துக்கு உட்பட்டவர்கள்தான்'' எனக் கடுமையாகத் தெரிவித்தனர்.

காவேரி கூக்குரல்
காவேரி கூக்குரல்

நீர்நிலைகளை, காடுகளைப் பாதுகாக்க யார் நடவடிக்கை மேற்கொண்டாலும் நாங்கள் வரவேற்போம். அதே வேளையில், அதைக் காரணம் காட்டி நன்கொடை பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஈஷா மையம் நன்கொடைகள் பெறுவதைத் தடுக்காத கர்நாடக அரசை இந்த நீதிமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஒரு தனியார் அமைப்பு கட்டாயமாக நன்கொடை வசூலிக்கிறது என்று மக்கள் புகார் சொல்கிறார்கள். அப்படியென்றால், அதை தடுப்பது அரசின் கடமை அல்லவா?'' என்று கேள்வி எழுப்பினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"நன்கொடை வசூலிப்பது குறித்து எந்தப் புகாரும் எங்களுக்கு வரவில்லை. ஆனால், அரசு நிலத்தில் தனியார் அமைப்புகள் மரங்கள் நடுவதை அனுமதிக்கவில்லை'' என்று கர்நாடக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பிப்ரவரி 22-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது, ஈஷா மையத்தின் தரப்பில் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதுவரை, `காவிரி அழைக்கிறாள்' திட்டத்துக்காக ஈஷா அமைப்பு நன்கொடை பெற்றுக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கஜா புயல் தாக்கத்திலிருந்து மீண்டு விட்டதா காவிரி டெல்டா? #DoubtOfCommonMan #OneYearOfGaja
கர்நாடக உயர் நீதிமன்றத்திலிருந்து விளக்கம் கேட்டு சம்மன் வந்தால், நாங்கள் பதிலளிப்போம்.
ஈஷா தரப்பு

ஈஷா தரப்பில் விளக்கம் கேட்டபோது, "இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. யாரையும் கட்டாயப்படுத்தி நாங்கள் நன்கொடை வசூலிக்கவில்லை. `காவிரி அழைக்கிறது' இணையதளத்தில் வசூல் ஆகும் தொகை குறித்த விவரங்கள் அனைத்தும் பதியப்பட்டுள்ளன. வெளிப்படையாகவே இதை நாங்கள் செய்கிறோம்.150 நாடுகளில் இருந்து மக்கள் இந்தத் திட்டத்துக்கு நிதி கொடுத்துள்ளனர். அப்படியென்றால் அவர்களையெல்லாம் நாங்கள் கட்டாயப்படுத்தியா நன்கொடை வாங்குகிறோம்?

ஆதியோகி
ஆதியோகி
களத்தில் கூக்குரல்... கலக்கும் எதிர்க்குரல்! - புதிய சர்ச்சையில் ஈஷா...

அதுபோல், அரசு நிலத்திலும் மரங்களை நாங்கள் நடவில்லை. விவசாயிகள் விருப்பத்தின் பேரிலேயே அவர்களின் ஒப்புதலுடன் மரங்களை நடுகிறோம். இதனால், பொருளாதாரரீதியாக அவர்கள் பலன் அடைவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக இந்தத் திட்டத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்போம். மீடியாக்களில்தான் இது போன்ற செய்திகள் வருகின்றன. கர்நாடக நீதிமன்றத்திலிருந்து அதிகாரபூர்வ சம்மன் எதுவும் எங்களுக்கு வரவில்லை. அப்படி, வந்தால் நாங்கள் முறையாகப் பதில் அளிப்போம்'' என்று தெரிவிக்கப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு