Published:Updated:

`சி.ஐ.எஸ்.எஃப் தேர்விலும் முறைகேடு!' -நெல்லைக்கு அதிர்ச்சி கொடுத்த பாதுகாப்புப் படை காவலர்

ஐ.எஸ்.எஃப் வீரர் பிரிகு பாருயா
ஐ.எஸ்.எஃப் வீரர் பிரிகு பாருயா

தமிழகத்தில் குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதுபோல அஸ்ஸாம் மாநிலத்தில் சி.ஐ.எஸ்.எஃப் தேர்வு குளறுபடி குறித்த விவரங்கள் வெளியாகி வருகின்றன.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள மகேந்திரகிரி மலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் செயல்படும் திரவ இயக்க உந்தும மையம் அமைந்துள்ளது. மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (சி.ஐ.எஸ்.எஃப்) தீவிரமான கண்காணிப்பில் இந்த மையம் செயல்படுகிறது. 

`அழியக்கூடிய மை; சிறப்புப்  பேனா; வாழ்நாள் தடை! -எப்படி நடந்தது டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முறைகேடு?

இதற்காக சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் சுமார் 200 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதுபோல அஸ்ஸாம் மாநிலத்தில் சி.ஐ.எஸ்.எஃப் தேர்வு குளறுபடி குறித்த விவரங்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், அஸ்ஸாமைச் சேர்ந்த பிரிகு பாருயா என்பவர் அந்த மாநிலத்தில் 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சிக்குப் பின்னர் மகேந்திரகிரியில் பணியில் அமர்த்தப்பட்டார். ஆனால், பயிற்சிக் காலத்தில் நடைபெற்ற தேர்வில் அவர் தோல்வியடைந்துள்ளார்.

மகேந்திரகிரி மையம்
மகேந்திரகிரி மையம்

இதனால் அதிர்ச்சியடைந்த பயிற்சிக் குழுவினர் அவருடைய தேர்வுத்தாளை எடுத்துச் சோதனையிட்டனர். அப்போது பணியில் சேருவதற்காக எழுதப்பட்ட தேர்வுத்தாளின் கையெழுத்தும் தற்போதைய கையெழுத்தும் வேறுவேறாக இருந்துள்ளது.

அதனால் தேர்வில் அவர் முறைகேடு செய்திருக்கக்கூடும் எனச் சந்தேகம் எழுந்ததால் அதைச் சரிபார்ப்பதற்காக சிம்லாவில் உள்ள இந்திய அரசின், கையெழுத்துகளைச் சரிபார்க்கும் மையத்துக்கு அவருடைய தேர்வுத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 

`சென்னையில் ப்ளான்.. ராமநாதபுரம் சென்டர்.. 15 லட்சம் டீல்!'- அதிரவைக்கும் குரூப்-4 தேர்வு முறைகேடு

அவரது கையெழுத்துகளை ஆய்வு செய்ததில் இரு தேர்வுத் தாள்களிலும் இருந்தவை வெவ்வேறான கையெழுத்துகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பணியாற்றிவந்த பிரிகு பாருயா பணியிலிருந்து கடந்த 27-ம் தேதி நீக்கப்பட்டார்.

மகேந்திரகிரியில் உள்ள தொழிற் பாதுகாப்பு படையின் அதிகாரிகள் பணகுடி காவல் நிலையத்திலும் பிரிகு பாருயா மீது புகார் அளித்தனர். அந்தப் புகாரைத் தொடர்ந்து பணகுடி காவல்துறையினரும் அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சி.ஐ.எஸ்.எஃப் வீரர் பிரிகு பாரியா
சி.ஐ.எஸ்.எஃப் வீரர் பிரிகு பாரியா

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணியில் சேருவதற்கு முறைகேடு நடந்திருக்கும் விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. `துணை ராணுவப் படைப்பிரிவுக்கான தேர்வில் நடந்த இந்த முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தி, பல்வேறு மாநிலங்களிலும் நடந்த தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்' எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு