Published:Updated:

செய்தியாளரிடம் அண்ணாமலையின் வாக்குவாதமும் பத்திரிகையாளர்களின் கண்டனமும்!

அண்ணாமலை

"பத்திரிகையாளர்களை மிரட்டுவது, அவர்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்வது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளை பாஜக-வினர் இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்" - மாற்றத்த்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்

செய்தியாளரிடம் அண்ணாமலையின் வாக்குவாதமும் பத்திரிகையாளர்களின் கண்டனமும்!

"பத்திரிகையாளர்களை மிரட்டுவது, அவர்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்வது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளை பாஜக-வினர் இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்" - மாற்றத்த்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்

Published:Updated:
அண்ணாமலை

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பாஜக தலைவர் அண்ணாமலை நிருபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையானது. இந்தச் சம்பவத்துக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் தனது ட்விட்டர் பக்கத்தில், "பத்திரிகையாளர்களைத் தரக்குறைவாகப் பேசிய அண்ணாமலை மன்னிப்புக் கேட்கும் வரை அவரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பைச் செய்தி நிறுவனங்கள் புறக்கணிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டது.

பாஜக
பாஜக

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த அண்ணாமலை, "பத்திரிகை மீது எனக்கு உண்மையான மரியாதையும் அன்பும் இருக்கிறது. ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. மரியாதை என்பதைக் கொடுத்துப் பெற வேண்டும். நீங்கள் என்னைப் புறக்கணிக்க விரும்பினால் அதை தாராளமாகச் செய்யுங்கள். தர்மம் மற்றும் சரியான வழிமுறைகளைப் பேணித்தான் செய்திகளை வழங்குகிறோமா என உங்களிடம் நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்" என பதிலளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அண்ணாமலை
அண்ணாமலை

``கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களை வாயடைக்கச் செய்யும் வகையில் அவர்களை இழிவுபடுத்துவது ஒரு கீழ்த்தரமான நடவடிக்கை.

செய்தியாளரிடம் அண்ணாமலையின் வாக்குவாதமும் பத்திரிகையாளர்களின் கண்டனமும்!

கடந்தகாலங்களிலும் அண்ணாமலை இது போன்றே செய்துள்ளார். அதன் தொடர்ச்சிதான் இதுவும். இதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், நேற்று பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்தபோது அது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிகையாளரிடம் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் கீழ்த்தரமாக நடந்திருக்கிறார். இது குறித்து அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் முறையிட்டும் இதுவரை அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மோடி
மோடி

பத்திரிகையாளர்களிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்ட பா.ஜ.க நிர்வாகிமீது பா.ஜ.க தலைமை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. பத்திரிகையாளர்களை மிரட்டுவது, அவர்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்வது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளை பா.ஜ.க-வினர் இத்துடன் நிறுத்திக்கொள்வதுடன், பத்திரிகையாளர்களிடம் அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது" எனக் குறிப்பிட்டுள்ளது.

செய்தியாளரிடம் அண்ணாமலையின் வாக்குவாதமும் பத்திரிகையாளர்களின் கண்டனமும்!

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில்," தமிழகத்தில் அண்மைக்காலமாகப் பத்திரிகையாளர்களைச் சிறுமைப்படுத்துவதும், அச்சுறுத்துவதும் அடிக்கடி நிகழ்கிறது. பத்திரிகையாளர்களின் கேள்விகள் தர்மசங்கடம் அளித்தால் அவற்றைத் தவிர்க்கலாமே தவிர, செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல. ஊடகவியலாளர்கள் மரியாதையோடு நடத்தப்படவேண்டியது அவசியம்" எனப் பதிவிடப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism